Photo of Vitis quadrangularis chutney by Natchiyar Sivasailam at BetterButter
403
10
0.0(2)
0

Vitis quadrangularis chutney

Oct-24-2017
Natchiyar Sivasailam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரண்டை ஒரு சிறிய கட்டு
  2. மிளகாய் வத்தல் 4
  3. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
  6. கறுப்பு உளுந்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
  7. பெருங்காயம் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிரண்டையைக் கழுவி வைக்கவும்.
  2. கைகளில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு பிரண்டைக் கணுக்களை உடைத்தால் அதிலுள்ள நார் வந்து விடும்.
  3. கைகளில் அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க நல்லெண்ணெய் தடவ வேண்டும்.
  4. நார் முழுவதும் நீக்கிய பின் பிரண்டையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  5. அடுப்பில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி முதலில் மிளகாய் வத்தலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  6. பிறகு உளுந்தம்பருப்பு மற்றும் பெருங்காயத்தை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  7. தேங்காய்த் துருவலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  8. கடைசியில் பிரண்டையை 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்கவும்.
  9. வறுத்தவற்றை ஆறவைக்கவும்.
  10. ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும்.
  11. இப்போது சுவையான பிரண்டைத் துவையல் தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sankari Satchu
Oct-25-2017
Sankari Satchu   Oct-25-2017

Tasty and healthy thuvaysl

Prince PM
Oct-24-2017
Prince PM   Oct-24-2017

ருசியான துவையல்

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்