வீடு / சமையல் குறிப்பு / பிரண்டை துவையல் சாதம்

Photo of Veldt Grape Rice by Saivardhini Badrinarayanan at BetterButter
539
4
0.0(0)
0

பிரண்டை துவையல் சாதம்

Oct-26-2017
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரண்டை துவையல் சாதம் செய்முறை பற்றி

பாரம்பரியமான பிரண்டை துவையல் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரண்டை 1 கப்
  2. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  3. வர மல்லி 2 மேஜைக்கரண்டி
  4. முழு உளுந்து 3 மேஜைக்கரண்டி
  5. வர மிளகாய் 5
  6. சின்ன வெங்காயம் 7
  7. துருவிய தேங்காய் 1/4 கப்
  8. புளி சிறிதளவு
  9. உப்பு தேவைகேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் பிரண்டையை ஒவொன்றாக எடுத்து அதில் இருக்கும் நாரை நான்கு முனைகளிலி்ருந்து கிள்ளி எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பின் ஒரு வாணலியில் ஜீரகம் மற்றும் வர மல்லி சேர்த்து எண்ணெய் இல்லாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் உளுந்து மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்று பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
  3. பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
  4. பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கிள்ளி வைத்த பிரண்டையை சேர்த்து நன்றாக வறுக்கவும். ( நிறம் மாறும்வரை வறுக்கவும்).
  5. பின் அதில் துருவிய தேங்காய் , புளி ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். எல்லாம் ஆறியவுடன் மிக்ஸில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  6. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை , பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்த பிரண்டை துவையல் 1 மேஜைக்கரண்டி சேர்த்து வதக்கவும்.
  7. பின் வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்