வீடு / சமையல் குறிப்பு / காயல்பட்டினம் அஹனி பிரியானி

Photo of Kayalpatnam ahani biryani by Safeena Safi at BetterButter
1259
5
0.0(0)
0

காயல்பட்டினம் அஹனி பிரியானி

Oct-27-2017
Safeena Safi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
9 மக்கள்
பரிமாறவும்

காயல்பட்டினம் அஹனி பிரியானி செய்முறை பற்றி

ஈத் ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 9

  1. பிரியாணி அரிசி -1கி
  2. மட்டன்-1 1/4 கி
  3. பச்சைமிளகாய் -12-15
  4. மல்லியிலை- 1கெட்டு
  5. புதினா -1கெட்டு
  6. பெ.வெங்காயம்- 7
  7. தக்காளி-4
  8. உப்பு தேவைக்கு
  9. தாளிக்க தேவையான பொருள்
  10. நெய்-200
  11. தேங்காய்எண்ணெய் -150
  12. இஞ்சி பூண்டு விழுது - 4 டேபிள் ஸ்பூன்
  13. ஏலக்காய் -7
  14. தயிர் -1/2 லிட்டர்
  15. பட்டைசிறிதளவு
  16. கிராம்பு -4
  17. மல்லி புதினா, பிரியாணி இலை சிறதளவு
  18. எலுமிச்சை-1 (சாறு பிளிந்தது)
  19. அரைக்க தேவையான பொருள்கள் :
  20. முந்திரி- 50கிராம்
  21. பாதாம் -50கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் மட்டன், சிறிது தயிர், உப்பு, சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 விசில் போட்டு வேக விடவும்.
  2. பிறகு அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  3. பாத்திரத்தில் ஆயில் நெய் விட்டு இஞ்சி பூண்டு தயிர் கருவா ஏலக்காய் , கிராம்பு மலலி புதினா ஆகிய வற்றை போட்டு தாளிக்கவும்
  4. பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ,உப்பு,பாதி அளவு மல்லி புதினா ஆகிய வற்றை போட்டு வேகவிடவும்
  5. பிறகு வேகவைத்த மட்டன் சேர்க்கவும்.
  6. வெந்தவுடன் அரைத்துவைத்த முந்திரி,பாதம் விழுதை சேர்க்கவும்.
  7. பின்பு ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  8. நன்கு கொதித்ததும் அரிசியை சேர்த்து உப்பை சரி பார்த்து மூடி விடவும்.
  9. 3/4 பதம் வெந்ததும் மீதம் உள்ள மல்லி புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து மிகக் குறைந்த தணலில் 15 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்