வீடு / சமையல் குறிப்பு / பனங்கிழங்கு லட்டு

Photo of Panangizhangu Ladoo /palm sprouts ladoo by Raihanathus Sahdhiyya at BetterButter
1200
4
0.0(0)
0

பனங்கிழங்கு லட்டு

Oct-28-2017
Raihanathus Sahdhiyya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பனங்கிழங்கு லட்டு செய்முறை பற்றி

தமிழ் நாட்டின் பாரம்பரிய கிழங்கு வகை தான் பனங்கிழங்கு... பொங்கல் சமயம் வந்துவிட்டால் போதும், எங்கும் பனங்கிழங்கு தான் !! எல்லோரும் விரும்பும் பனங்கிழங்கை ஏன் ஒரே மாதிரியே சாப்பிட வேண்டும்??. ... இதோ உங்களுக்கான நான் செய்து பார்த்து மகிழ்ந்த பனங்கிழங்கு லட்டு ரெசிபியின் செய்முறை..... வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அவித்த பனங்கிழங்கு - 7 /8
  2. நறுக்கப்பட்ட தேங்காய் - ஒரு கைப்பிடி அளவு அல்லது சிறிது கூட.
  3. பனஞ்சக்கரை - 4-5 தேக்கரண்டி
  4. பொடியாக நறுக்கிய பருப்புகள் (பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் ....)
  5. நெய் - சிறிதளவு

வழிமுறைகள்

  1. அவித்த பனங்கிழங்குகளை எடுத்து அவற்றின் தோலையும் நடுப்பகுதியில் இருக்கும் குச்சி போன்றவற்றையும் நீக்க வேண்டும்.
  2. பிறகு நார்களை உரித்தெடுக்க வேண்டும். இயன்றளவு நார்களை நீக்கிவிட வேண்டும்.
  3. பிறகு பனங்கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  4. பனங்கிழங்கு துண்டுக்கள், தேங்காய் துண்டுகள் இரண்டையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். மிகவும் பேஸ்ட் போல் வரக் கூடாது.
  5. ஒரு கிண்ணத்தில் அரைத்த கலவையை சேர்த்து, அதனுடன் பனஞ்சக்கரையும் பொடீத்த பருப்பு வகைகளையும் சேர்த்து நன்றாக பிசையவும்.
  6. கையில் சிறிது நெய் தடவி அக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
  7. மேலே சிறிது பொடித்த பாதாம் முந்திரி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்