வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி பாவு

Photo of Karupatti paavu by Safeena Safi at BetterButter
111
6
0.0(0)
0

கருப்பட்டி பாவு

Oct-31-2017
Safeena Safi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி பாவு செய்முறை பற்றி

ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நோய் எதிர்ப்பு சக்தியை ஊட்ட வல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • இந்திய
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கருப்பட்டி -1/2 கி
  2. துருவிய தேங்காய்-1/2 மூடி
  3. கத்தரிக்காய் -3
  4. மாம்பழம்-1
  5. தண்ணீர்- 1/2 டம்ளர்

வழிமுறைகள்

  1. முதலில் கத்தரிக்காவை நீளமாக வெட்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.3நிமிடம் கழித்து கார்ப்பு தன்மை நீங்க கொதிக்க விடவும். பிறகு தண்ணீரை வடித்து வைக்கவும்
  2. ஒரு அகன்ற பாத்திரத்தில் கருப்பட்டி, தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வரும் பொழுது அடுப்பைக் குறைத்து வைத்து கிண்டவும்.
  3. தேங்காய் அரைப் பதம் வெந்ததும் கத்தரிக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய மாம்பழத்தை சேர்க்கவும். அவ்வப்போது கிண்டி கொண்டே இருக்க வேண்டும். நன்றாக கெட்டியாகும் பொழுது கையில் எடுத்து பார்க்கவும். நன்கு பிசுபிசுப்பாக இருந்தால் அதுவே பாவின் பதம்.
  4. பாவை ஆற விட்டு ஏர் டைட் டப்பாவில் வைக்கவும். இது காஃபி குடிக்கும் பொழுது சாப்பிட்டால் அருமையாக இருக்கும். சப்பாத்தி, இட்லி, தோசை எதற்கு வேண்டுமானாலும் சைட்டிஸ்ஸாக எடுத்து கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்