வீடு / சமையல் குறிப்பு / நெல்லை புளியிட்ட பொரிச்சகுழம்பு

Photo of Nellai puliitta poricha kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
1028
5
0.0(0)
0

நெல்லை புளியிட்ட பொரிச்சகுழம்பு

Nov-02-2017
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நெல்லை புளியிட்ட பொரிச்சகுழம்பு செய்முறை பற்றி

திருநெல்வேலியில் வார இறுதியில் மீதம் இருக்கும் காய்களைக் கொண்டு செய்யப்படும் குழம்பு இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காய்கள் நறுக்கியது - 2 cup
  2. துவரம்பருப்பு - 1 / 2 cup (வேக வைப்பதற்கு )
  3. தேங்காய் துருவல் - 1 / 2 cup
  4. உப்பு - 2 தேக்கரண்டி
  5. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  6. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  7. உளுத்தம்பருப்பு- 2தேக்கரண்டி
  8. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
  10. மிளகு - 1 தேக்கரண்டி
  11. சீரகம் - 1 தேக்கரண்டி
  12. பெருங்காயம் - சிறிய துண்டு
  13. மிளகாய் வத்தல் - 2
  14. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 ஆர்க்கு மிளகாய் வத்தல் - 2
  15. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. துவரம்பருப்பு பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குக்கரில் வேக வைக்கவும்
  2. காய்களை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. மஞ்சள்பொடி தண்ணீர் சேர்த்து காய்களை வேகவிடவும்
  4. நன்றாக வெந்ததும் புளி கரைத்து விட்டு உப்பு சேர்க்கவும்
  5. உளுத்தம்பருப்பு துவரம்பருப்பு கொத்தமல்லி விதை 2 மிளகாய் வத்தல் மிளகு சீரகம் பெருங்காயம் எல்லாம் சேர்த்து ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும்.
  6. வறுத்ததை ஆறவிட்டு பின்னர் தேங்காய்துருவல்சேர்த்து அரைக்கவும்
  7. புளி பச்சை வாசனை போனவுடன், வெந்த பருப்பையும் சேர்த்து , அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
  8. எண்ணெய்யில் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை மிளகாய் வத்தல் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்தால் சுவையான புளியிட்ட பொரிச்சகுழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்