Photo of Urad Dhal Rice by Arunaa Sailam at BetterButter
557
5
0.0(3)
0

Urad Dhal Rice

Nov-06-2017
Arunaa Sailam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Urad Dhal Rice செய்முறை பற்றி

சத்தான உணவு. திருநெல்வேலி பக்கத்தில் வயது வந்த பெண்களுக்கு காெடுக்கப்படும் முக்கிய உணவு. ஆண்மை விருத்திக்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி ஒரு கப்
  2. தாேல் உளுந்தம் பருப்பு அரை கப்
  3. பூண்டு பல் 15
  4. வெந்தயம் 1 கரண்டி
  5. தேங்காய் அரை மூடி திருவியது
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. எள்ளு துவையலுக்கு:
  8. எள்ளு ஐம்பது கிராம்
  9. வர மிளகாய் ஐந்து
  10. புளி நெல்லிக்காய் அளவு
  11. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் உளுந்தம் பருப்பை பாென்னிறமாய் வாசம் வரும் வரை வறுக்கவும்
  2. அந்த வறுத்த உ.பருப்பில் அரிசி, வெந்தயம், பூண்டு பல், தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும்
  3. மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து திருவிய தேங்காய்ப்பூ சேர்த்து கிளரவும்
  4. வேறு பாத்திரத்தில் மாற்றி விடவும். குக்கரில் வைத்திருந்தால் குழைந்து விட வாய்ப்பு உள்ளது.
  5. சூடான சுவையான உளுந்தம் பருப்பு சாதம் தயார்.
  6. வெறும் வாணெலியில் எள்ளைப் பாேட்டு வெடிக்க விடவும்
  7. கடாயில் நல்லெண்ணையை ஊற்றி வரமிளகாயைப் பாேட்டு வறுத்து ஆற வைத்துக் காெள்ளவும்
  8. பின்பு வரமிளகாய், உப்பு, புளி மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்
  9. பிறகு வறுத்த எள்ளையும் அதனுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவும்
  10. சூப்பரான சத்தான மணமான எள்ளுத் துவையல் ரெடி
  11. எள்ளு துவையல், அப்பளம், வத்தல், சிப்ஸ் வைத்து சாப்பிட சுவை அள்ளும் இந்த உளுந்தம் பருப்பு சாதம்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Feb-07-2018
  Feb-07-2018

அருமை

Ramalingam S
Nov-27-2017
Ramalingam S   Nov-27-2017

Great!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்