வீடு / சமையல் குறிப்பு / ஏத்தங்காய்ப்பொடி லட்டு

Photo of Raw Banana Powder Ladoo by Ayesha Ziana at BetterButter
421
2
0.0(0)
0

ஏத்தங்காய்ப்பொடி லட்டு

Nov-08-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஏத்தங்காய்ப்பொடி லட்டு செய்முறை பற்றி

நேந்திரன்காய்ப்பொடியை வைத்து செய்த லட்டு.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நேந்திரன்காய் பொடி 1 கப்
  2. வெல்லம் 1/2 கப்
  3. தண்ணீர் 1/3 கப் அல்லது சற்று குறைவாக
  4. தேன் 1 டேபிள் ஸ்பூன்
  5. தட்டிய ஏலக்காய் 3
  6. துருவிய தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  7. நெய் கையில் தடவ

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் ஏத்தங்காய்ப்பொடி, தேங்காய், ஏலக்காய், சேர்த்து கலக்கவும்.
  2. வாணலியில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின் வெல்லம் கரைந்ததும் அதை வடிகட்டி எடுக்கவும்.
  3. பவுலில் தேனை சேர்க்கவும். வெல்லத் தண்ணீரையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும். லட்டு பிடிக்கும் பதம் வந்ததும், கைகளில் நெய் தடவி, லட்டு பிடிக்கவும்.
  4. ஆரோக்கியமான லட்டு தயார்.
  5. இது மை ஈட்டிங் ஸ்பேஸ் என்ற பிளாக் ரெசிபி யை பின்பற்றி செய்யப் பட்டது.
  6. ஏத்தங்காய் பொடி குழந்தைகளுக்கு 6 மாதம் ஆனதுமே கொடுக்க தொடங்கலாம். வளர்ந்த குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் சாப்பிடலாம். இது கன்னியாகுமரி மாவட்டம், கேரளா போன்ற இடங்களில் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்கும் பொடி. இதில் பல விதமான ரெசிபி செய்யலாம். இந்த லட்டு ரெசிப்பியும் செய்வதற்கு எளிதானது. சுத்தமான ஏத்தங்காய் பொடி கிடைக்கப் பெறாதவர்கள் வீட்டிலேயே நேந்திரன் காயை வெயிலில் நன்றாக காய வைத்து பொடித்து கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்