வீடு / சமையல் குறிப்பு / Dal Idli

Photo of Dal Idli by Ayesha Ziana at BetterButter
57
3
0.0(1)
0

Dal Idli

Nov-09-2017
Ayesha Ziana
780 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Dal Idli செய்முறை பற்றி

அரிசி சேர்க்காமல் பருப்புகளை வைத்து செய்யும் மிருதுவான, புரதச்சத்து நிறைந்த இட்லி.

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • தமிழ்நாடு
 • ப்லெண்டிங்
 • ஸ்டீமிங்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. பாசிபருப்பு 1/2 கப்
 2. உளுத்தம்பருப்பு 1/2 கப்
 3. வெந்தயம் சிறிது
 4. உப்பு தேவைக்கு
 5. தண்ணீர் தேவைக்கு
 6. எண்ணெய் தட்டில் தடவ

வழிமுறைகள்

 1. பாசி பருப்பை ஒரு பவுலிலும், உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை மற்றொரு பவுலிலும் 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.
 2. மிக்ஸியில் இரண்டையும் தனித்தனியாக தேவைக்கு தண்ணீர் சேர்த்து மை போல அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
 3. உப்பு சேர்த்து நன்றாக கலந்து, 5 முதல் 8 மணி நேரம் வரை புளிக்க விடவும். மாவு சிறிது பொங்கி வந்திருக்கும். அரிசி இட்லி மாவு மாதிரி அதிக நேரம் புளிக்க வேண்டாம்.
 4. இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவு ஊற்றி ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
 5. சிறிது ஆறியதும் இளக்கி தட்டில் வைத்து பரிமாறவும்.
 6. அருமையான பருப்பு இட்லி தயார். இதனுடன் சட்னி, சாம்பார், விருப்பப்பட்ட சைட் டிஷ் செய்யலாம். 6 மாதக் குழந்தைகள் முதல் தாராளமாக இந்த இட்லி கொடுக்கலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raji Arun
Nov-09-2017
Raji Arun   Nov-09-2017

பாசிப்பருப்பா பாசிப்பயறா சின்ன டவுட் please clarify

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்