வீடு / சமையல் குறிப்பு / சில்லி பிரெட்

Photo of Chilly Bread by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
454
3
0.0(0)
0

சில்லி பிரெட்

Nov-10-2017
Muthulakshmi Madhavakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சில்லி பிரெட் செய்முறை பற்றி

சில்லி பிரெட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதை மாலை நேர உணவாக அல்லது காலை டிபனாக செய்து கொடுத்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 7 பிரெட் ஸ்லைஸ்
  2. 1 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 பச்சை மிளகாய்
  5. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்
  7. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. 1 டேபிள் ஸ்பூன் வெங்காயத்தாள்
  11. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. நெய் அல்லது வெண்ணெய்
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம், தக்காளியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது நீளமாக கீறி கொள்ளவும்.
  2. தோசைக்கல்லில் நெய் அல்லது வெண்ணெய் தடவி பிரெட் ஸ்லைஸ்கள் அனைத்தையும் முறுகலாக சுடவும். 2 பக்கமும் நன்கு பிரவுன் கலர் ஆகும் வரை சுடவும்.
  3. பின் கத்தரிக்கோல் வைத்து சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
  6. அவை நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக கலந்து தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
  8. பின் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். வெங்காயம் தக்காளியோடு நன்கு கலக்கவும்.
  9. இப்போது நறுக்கி வைத்துள்ள பிரெட் துண்டுகளை சேர்த்து பொறுமையாக நன்கு கலக்கவும். பிரெட் ஸ்லைஸ்கள் அனைத்தும் வெங்காய தக்காளி கவலையோடு கலந்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
  10. பரிமாறும் போது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விடலாம். சுவையான சில்லி பிரெட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்