வீடு / சமையல் குறிப்பு / முந்திரி வெனிலா கேக்

Photo of Cashew vanilla cake by Sowmya Sundar at BetterButter
545
5
0.0(0)
0

முந்திரி வெனிலா கேக்

Nov-11-2017
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முந்திரி வெனிலா கேக் செய்முறை பற்றி

வீட்டிலேயே சுலபமாக செய்து குழந்தைகளுக்கு தரலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா - 1 1/2 கப்
  2. சர்க்கரை - 3/4 கப்
  3. வெண்ணெய் - 1/2 கப்
  4. பால் - 1/4 கப்
  5. புளிக்காத தயிர் - 1/2 கப்
  6. பேக்கிங் பவுடர்- 1 1/4 ஸ்பூன்
  7. பேக்கிங் சோடா-1/2 ஸ்பூன்
  8. வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
  9. முந்திரி - 15 துண்டுகள்

வழிமுறைகள்

  1. முதலில் மைதா ,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சலித்து கொள்ளவும்.
  2. ஓவனை 200 டிகிரி செல்சியசில் 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்து கொள்ள வேண்டும்.
  3. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை,தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. அதில் பால் சேர்த்து கலந்து கொண்டு பின்னர் சலித்து வைத்த மைதா ,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலவையை அதில் சேர்த்து மெதுவாக நன்றாக சேரும் வரை கலந்து கொள்ள வேண்டும்.
  5. கடைசியில் வெனிலா எசன்ஸ் சேர்த்து கொள்ள வேண்டும்.
  6. இந்த கலவை இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
  7. பேக் செய்யும் பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் தடவி மைதா தூவி கொள்ளவும்.
  8. அதில் கலவையை ஊற்றி பின்னர் முந்திரியை மேலே தூவவும்.
  9. ஓவனில் 180 டிகிரியில் 30-35 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  10. நன்கு ஆறிய பின் துண்டுகளாக நறுக்கவும்.
  11. விருப்பப்பட்டால் பொடித்த சர்க்கரை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்