வீடு / சமையல் குறிப்பு / ரெயின்போ ரைஸ் கேக் (புட்டு)

Photo of Rainbow rice cake by Rabia Hamnah at BetterButter
999
3
0.0(0)
0

ரெயின்போ ரைஸ் கேக் (புட்டு)

Nov-11-2017
Rabia Hamnah
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரெயின்போ ரைஸ் கேக் (புட்டு) செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு-2 கப் (Big tumblers)
  2. பனங்கற்கண்டு -3 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு-1 ஸ்பூன்
  4. ஏலக்காய் பொடி-1 ஸ்பூன்
  5. துருவிய தேங்காய்- 3/4 கப்

வழிமுறைகள்

  1. வறுத்த அரிசி மாவை சல்லடையில் வைத்து நன்றாக சலித்து கொள்ளவும்.
  2. பின்பு மாவுடன் தேங்காய், உப்பு, பனங்கற்கண்டு, ஏலப்பொடி அனைத்தையும் சேர்த்து கிளற வேண்டும்.
  3. கலந்த மாவை நான்கு சமமான பகுதிகளாக வைக்கவும்.
  4. இட்வி குக்கரில் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும். முதலில் ஒரு பங்கு மாவை எடுத்து சிறிது தண்ணர் சேர்த்து மிருதுவாக புட்டிற்கு சேர்ப்பது போல் சேர்க்கவும். இது வெள்ளை நிறம்.
  5. பின் மற்றொரு பங்கில் மஞ்சள் தூளை சிறிது தண்ணீரில் கலந்து புட்டிற்கு சேர்ப்பது போல் சேர்த்து வைக்கவும். இது மஞ்சள் நிறம்.
  6. பின் மற்றொரு பங்கில் கேரட் கொஞ்சம் சீவி போட்டு தண்ணீர் சேர்த்து புட்டிற்கு சேர்ப்பது போல் சேர்த்து வைக்கவும். இது ஆரஞ்சு நிறம்.
  7. பின் கடைசி பங்கில் பீட்ரூட் சாறு சேர்த்து தண்ணீர் சேர்த்து புட்டிற்கு சேர்ப்பது போல் சேர்த்து வைக்கவும். இது பின்க் நிறம்.
  8. வட்டமான பாத்திரத்தில் நெய்யை தடவி முதலில் வெள்ளை நிற மாவை பரத்தி வைக்கவும். பின் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் பின்க் ஆகியவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக பரப்பி இட்லி குக்கரில் வைத்து வேகவிடவும். வெந்த பின்பு ஒரு தட்டில் தட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்