வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளி கிழங்கு புட்டு, பாயாசம்

Photo of Maravalli kilangu puttu and payasam by Rabia Hamnah at BetterButter
1648
4
0.0(0)
0

மரவள்ளி கிழங்கு புட்டு, பாயாசம்

Nov-11-2017
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளி கிழங்கு புட்டு, பாயாசம் செய்முறை பற்றி

மரவள்ளி கிழங்கு குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. ஆகையால் அவ்வப்போது சேர்த்து கொள்வது நலம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கேரளா
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மரவள்ளி கிழங்கு புட்டு செய்ய தேவையானவை
  2. மரவள்ளி கிழங்கு -1/2 கி
  3. தேங்காய்-1 துருவியது
  4. உப்பு-2சிட்டிகை
  5. மரவள்ளி கிழங்கு பாயாசம் செய்ய தேவையானவை:
  6. மரவள்ளி கிழங்கு-1கப் (Rice cooker cup)
  7. ஜவ்வரிசி-1/4 கப்
  8. சேமியா-1/4கப்
  9. ஏலக்காய்-4
  10. பாதாம்-10 முந்திரி-10
  11. குங்குமப்பூ-2 பின்ச்
  12. பால்-1/2 லிட்டர்
  13. பனை வெல்லம்- தேவைக்கு ,
  14. நெய்-1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து சீவிக் கொள்ளவும்.
  2. பின் கிழங்குடன் உப்பு சேர்த்து விரவி வைக்கவும். பின்பு கிழங்கை கையை வைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்.
  3. பின்பு புட்டு குழாயினுல் முதலில் கொஞ்சம் துருவிய தேங்காய் போட்டு கிழங்கு கொஞ்சம் பின்பு தேங்காய் பின்பு கிழங்கு என மாற்றி மாற்றி வைத்து இறுதியாக தேங்காய் வைத்து மூடி போட்டு 15-20 நிமிடம் வேக விட்டு இறக்கவும். புட்டு தயார். மிகச் சுலபமாக செய்து விடலாம்.
  4. பாயாசம் செய்முறை முதலில் ஜவ்வரிசியை 1கப் தண்ணீரில் 1மணி நேரம் ஊற வைக்கவும்.
  5. கிழங்கை பொடியாக வெட்டி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக விடவும். கண்ணாடி போல் வெந்ததும் ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
  6. பாலை காய்ச்ச வேண்டும். பாலுடன் ஏலக்கா தட்டி போட்டு காய்ச்சவும். பின்பு ஜவ்வரிசியை சேர்த்து காய்ச்சவும். ஜவ்வரிசி வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து சேமியாவை சேர்த்து கின்டி கொண்டே இருக்கவும்.
  7. பின்பு கொஞ்சம் பாலுடன் பருப்பு வகைகளை சேர்த்துஅரைத்து அதையும் சேர்த்து கின்டி பனைவெல்லம் சேர்த்து நெய் சேர்க்கவும். பின்பு குங்குமப்பூ சேர்த்து கிளறி விட்டு இறக்கி விடவும். ஆறியதும் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்