Photo of Pasta pulav by Asiya Omar at BetterButter
649
5
0.0(2)
0

Pasta pulav

Nov-11-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Pasta pulav செய்முறை பற்றி

ருசியான விரைவில் செய்யக்கூடிய குழந்தைகள் விரும்பும் டிபன்.மக்ரோனியுடன் மசாலா,தேங்காய்ப்பால் சேர்த்து ப்ரெசர் குக்கரில் செய்யும் அசத்தலான குறிப்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மக்ரோனி -200 கிராம்
  2. பெரிய வெங்காயம் -1
  3. தக்காளி -1
  4. பச்சை மிளகாய் -2
  5. கொத்தமல்லி, புதினா இலைகள் - சிறிது
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 டீஸ்பூன்
  7. கரம் மசாலா,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
  8. தேங்காய்ப்பால் மீடியம் திக்னெஸ் - மக்ரோனிக்கு ஒரு அளவு.
  9. தண்ணீர் -மக்ரோனிக்கு 2 அளவு.
  10. எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
  11. நெய் - 1 டீஸ்பூன்
  12. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை தயார் செய்யவும்.
  2. குக்கரில் எண்ணெய் நெய் சூடு செய்யவும்.வெங்காயம் வதக்கவும்.இஞ்சி பூண்டு சேர்க்கவும்.வதக்கவும்.
  3. தக்காளி,மல்லி,புதினா, மிளகாய் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.மசாலா வகைகள் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
  4. தேங்காய்ப்பால்,தண்ணீர்,உப்பு சேர்க்கவும்.
  5. கொதி வரும் பொழுது மக்ரோனி சேர்க்கவும்.குக்கரை மூடி வெயிட் போடவும்.
  6. 2 விசில் வந்தவுடன் அடுப்பைக் குறைத்து 5 நிமிடம் வைக்கவும்.
  7. ஆவியடங்கியவுடன் திறந்து பரிமாறவும்.
  8. சுவையான மக்ரோனி புலாவ் தயார்.காலை,மாலை அல்லது இரவு நேர டிபனாக கொடுக்கலாம்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
revathi karthikeyan
Mar-07-2018
revathi karthikeyan   Mar-07-2018

Janani Joseph Albert
Mar-07-2018
Janani Joseph Albert   Mar-07-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்