Photo of Bread 65 by Banupriya Jawahar at BetterButter
1027
3
0.0(0)
0

ப்ரெட் 65

Nov-15-2017
Banupriya Jawahar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் 65 செய்முறை பற்றி

மீந்து போன ப்ரெட் துண்டுகளை வீணாக்காமல், எளிய முறையில் செய்யக்கூடிய, குழந்தைகள் விரும்பும் மாலை நேர ஸ்நாக்!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் ஸ்லைஸ் 3
  2. மைதா 1/2 கப்
  3. கார்ன் ஃப்ளார் 1/4 கப்
  4. இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
  6. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  8. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  9. தக்காளி சாஸ் 1 மேஜைக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ப்ரெட் துண்டுகளின் நான்கு பக்கமும் வெட்டிக் கொள்ளவும்.
  2. ப்ரெட் துண்டுகளை தண்ணீரில் தோய்த்து, பின், தண்ணீரை பிழிந்து விடவும்.
  3. ஈரமான ப்ரெட் துண்டுகளை சிறுசிறு வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.
  4. வெட்டிய வில்லைகளை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன் ஃப்ளார், மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சாஸ், உப்பு சேர்த்து கலக்கவும்.
  6. சிறிது தண்ணீர் விட்டு மென்மையான பேஸ்ட்டாக்கவும்.
  7. இந்த பேஸ்ட்டில் உருட்டி வைத்துள்ள ப்ரெட் துண்டுகளை போட்டு பிசிறவும்.
  8. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ப்ரெட் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
  9. நறுக்கிய வெங்காயம், மல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்