வீடு / சமையல் குறிப்பு / பனீர் ஸ்டப்டு இடியாப்பம்

Photo of Paneer Stuffed Stringhoppers by Hameed Nooh at BetterButter
449
3
0.0(0)
0

பனீர் ஸ்டப்டு இடியாப்பம்

Nov-15-2017
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் ஸ்டப்டு இடியாப்பம் செய்முறை பற்றி

இடியாப்பம் நாம் சமைப்பது தான் என்றாலும் அதிலே காய்கறிகள் குறிப்பாக புரதச்சத்து நிறைந்த பனீர் சேர்த்து உள்ளே வைப்பதால் சத்தான மற்றும் அவர்களுக்கு விருப்பமான உணவாகவும் அமையும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இடியாப்பம் மாவு - 1 கப்
  2. எண்ணெய் - 1 tsp
  3. உப்பு - தேவையான அளவு
  4. தண்ணீர் - தேவையான அளவு
  5. பனீர் - 1 கப் ( துருவியது )
  6. குடைமிளகாய் - 1 ( சிறிதாக நறுக்கியது )
  7. பல்லாரி - 1
  8. பச்சை மிளகாய்  - 2 ( பொடிதாக நறுக்கியது )
  9. பூண்டு - 4 பற்கள்
  10. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் -    1/2 தேக்கரண்டி
  12. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  13. பச்சை பட்டாணி  - 1/2 கப் ( அவித்தது )
  14. தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
  15. மல்லி இலை - கொஞ்சம்

வழிமுறைகள்

  1. இடியாப்பம் செய்முறை : தண்ணீரை சிறிது எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து மாவை அதோடு சேர்த்து நன்கு கலக்கவும். சப்பாத்தி மாவின் பதத்தில் இருந்தால் மாவின் பதம் சரியானது.
  2. ஸ்டப்பிங் (stuffing) செய்முறை : வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை  சற்று நிறம் மாறும் வரை வதக்கவும்.
  3. பச்சை மிளகாய், கரம் மசாலா,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  4. குடை மிளகாய் சேர்த்து மிருதுவாக ஆகும் வரை கிளறவும்
  5. பனீர் , பச்சை பட்டாணி , தக்காளி சாஸ் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். இறுதியாக மல்லி இலை சேர்க்கவும்
  6. ஸ்டப்டு (stuffed) இடியாப்பம் செய்முறை : இடியாப்பம் அச்சில் போதுமான மாவை நிரப்பவும்.
  7. இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தேய்த்து இடியாப்பம் மாவை ஒரு அடுக்கு பிழியவும்.
  8. அதில் ஒரு மேஜை கரண்டி ஸ்டப்பிங்கை ( stuffing ) வைத்து அதன் மேல் மற்றொரு அடுக்கு மாவை பிழியவும்.
  9. இவ்வாறாக இட்லி தட்டை நிறைத்து மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை அவிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்