வீடு / சமையல் குறிப்பு / கடாய் பனீர் க்ரேவி

Photo of Kadai Paneer Gravy by Rajeswari Annamalai at BetterButter
151
4
0.0(0)
0

கடாய் பனீர் க்ரேவி

Nov-17-2017
Rajeswari Annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடாய் பனீர் க்ரேவி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவில் இந்த பன்னீர் க்ரேவி ஒன்று. இதை சப்பாத்தி, பூரி, நான் ரொட்டி, சீரகம் சாதம், புலாவ் போன்ற உணவுகளுடன் பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ப்யூரி :
  2. 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
  3. 1 இன்ச் இஞ்சி
  4. 6 பூண்டு பல்
  5. 1 மீடியம் வெங்காயம்
  6. 2 மீடியம் தக்காளி
  7. 12 முந்திரி
  8. 1/2 தேக்கரண்டியளவு கேஷ்மிரி மிளகாய் தூள்
  9. 1/2 தேக்கரண்டியளவு மிளகாய் தூள்
  10. 1/4 தேக்கரண்டியளவு மஞ்சள் தூள்
  11. 1/4 கப் தண்ணீர்
  12. மசாலா:
  13. 3 சிவப்பு காய்ந்த மிளகாய்
  14. 2 1/2 தேக்கரண்டியளவு மல்லி விதை
  15. 1/2 தேக்கரண்டியளவு முழு மிளகு
  16. 1 தேக்கரண்டியளவு சீரகம்
  17. கடாய் பனீர்
  18. 1 1/2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  19. 1 வெங்காயம் க்யூப்ஸ்
  20. 1 பச்சை மிளகாய் (விரும்பினால்
  21. 1 பிரிஞ்சி இலை
  22. 200 கிராம் பனீர் க்யூப்ஸ்
  23. 1 சிறிய குடைமிளகாய் க்யூப்ஸ்
  24. உப்பு தேவையான அளவு
  25. 3/4 தேக்கரண்டியளவு கரம் மசாலா தூள்
  26. 1/2 கப் - 3/4 கப் தண்ணீர்
  27. 1/4 தேக்கரண்டியளவு கசூரி மேத்தி
  28. 1/2 தேக்கரண்டியளவு நறுக்கிய கொத்தமல்லி
  29. 1/8 கப் க்ரீம்

வழிமுறைகள்

  1. ப்யூரி:
  2. எண்ணெய் சூடானதும், இஞ்சி பூண்டு வதக்கி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. தக்காளி மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும்
  4. நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், கேஷ்மிரி மிளகாய் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  5. அடுப்பை அணைத்து, வதக்கியதை ஆரியவுடன் 1/4 கப் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
  6. மசாலா:
  7. வெறும் வாணலியில் மல்லி விதை, மிளகு, சீரகம், மிளகாய் ஒவ்வொன்றையும் சேர்த்து வறுக்கவும்
  8. ஆறியவுடன் பவுடர் செய்து கொள்ளவும்
  9. கடாய் பன்னீர் க்ரேவி:
  10. எண்ணெய் சூடானதும், பிரிஞ்சி இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  11. பின்னர் வெங்காயம் க்யூப்ஸ மற்றும் குடைமிளகாய் க்யூப்ஸ் சேர்த்து இரண்டு வினாடி பெரிய ப்ளேமில் வதக்கவும். இது நறுக்கென்று இருக்க வேண்டும்
  12. பின்னர் 1 1/2 மேஜைக்கரண்டி மசாலா தூள் சேர்த்து, உப்பு மற்றும் தண்ணீர் கலந்து 3 நிமிடங்களுக்கு குக் செய்ய வேண்டும்
  13. இப்போது பன்னீர், கரம் மசாலா தூள் கலந்து மூடி வைத்து 4-5 நிமிடங்களுக்கு வேகவைத்து, கசூரி மேத்தி சேர்த்து கலக்கவும்
  14. அடுப்பை அணைத்து விட்டு, க்ரீமை சேர்த்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்