வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய கருப்பட்டி தோசை

Photo of Millet palm jaggery dosa by Sowmya Sundar at BetterButter
702
2
0.0(0)
0

சிறுதானிய கருப்பட்டி தோசை

Nov-19-2017
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய கருப்பட்டி தோசை செய்முறை பற்றி

சிறுதானியங்கள் உடலுக்கு வலிமை சேர்ப்பவை. கருப்பட்டியில் குளுக்கோஸ், கால்சியம் சத்து அதிகம் உள்ளது. பள்ளியில் இருந்து சோர்ந்து வரும் குழந்தைகளுக்கு டாப்பான சிற்றுண்டி இது .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கம்பு மாவு - 1/4 கப்
  2. ராகி மாவு - 1/4 கப்
  3. திணை மாவு - 1/4 கப்
  4. கோதுமை மாவு - 1/4 கப்
  5. கருப்பட்டி - 3/4 கப்
  6. நெய் - சிறிதளவு
  7. ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பொடித்த கருப்பட்டியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து லேசாக சூடாக்கவும்.கருப்பட்டி கரைந்தவுடன் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
  2. பின்னர் வடிகட்டி கொள்ளவும். ஆறியதும் கொடுக்கப்பட்டுள்ள மாவு வகைகளுடன் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  3. ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும் .கல்லில் தோசைகளாக நெய் விட்டு வார்த்து எடுக்கவும்.
  4. சத்தான ,சுவையான இனிப்பு தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்