வீடு / சமையல் குறிப்பு / வெஜ் பிரெஞ்ச் ப்ரை மற்றும் மசாலா ப்ரஞ்ச் ப்ரை

Photo of Vegetable french fries  and masala coated french fries by Krishnasamy Vidya Valli at BetterButter
361
2
0.0(0)
0

வெஜ் பிரெஞ்ச் ப்ரை மற்றும் மசாலா ப்ரஞ்ச் ப்ரை

Nov-21-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் பிரெஞ்ச் ப்ரை மற்றும் மசாலா ப்ரஞ்ச் ப்ரை செய்முறை பற்றி

ப்ரஞ்ச் ப்ரை இல்லாத கிட்ஸ் ஸ்பெஷலா? குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்டாட்டர் வெரைட்டி இது. கொஞ்சம் வித்யாசமாக உருளைகிழங்கை மட்டும் வைத்து செய்யாமல் எல்லா காய்களையும் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு, வாழைக்காய், பீன்ஸ், சேனை, கத்தரிக்காய், பீட்ரூட், கேரட், சௌசௌ - தலா 10 முதல் 15 துண்டுகள்
  2. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  3. மிளகு பொடி - 1 / 2 தேக்கரண்டி
  4. ப்ரஞ்ச் ப்ரைமசாலா செய்ய மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  5. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  6. மிளகு பொடி - 1 / 4 தேக்கரண்டி
  7. ஆம்சூர் பவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  8. உப்பு - 3 / 4 தேக்கரண்டி
  9. கரம் மசாலா - 1 / 2 தேக்கரண்டி
  10. கடலைமாவு - 2 தேக்கரண்டி
  11. கான்பிளவர் - 2 தேக்கரண்டி
  12. பொரிப்பதற்குதேவையானஅளவுஎண்ணெய்

வழிமுறைகள்

  1. காய்களை ஒரு விரல் நீளத்திற்கு நறுக்கி வைக்கவும் . இதில் பாதி நார்மல் ப்ரஞ்ச் ப்ரை ஆகவும் மீதி மசாலா ப்ரஞ்ச் ப்ரை ஆகவும் செய்யலாம்
  2. கத்தரிக்காய் தவிர மீதி எல்லா காய்களையும் கொதிக்கும் நீரில் போட்டு மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் கழித்து எடுக்கவும்
  3. ஒரு துணியில் காயவிடவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீடியம் ப்ளேமில் தனித்தனியே பொரித்து எடுக்கவும் . கத்தரிக்காயை அப்படியே பொரிக்கலாம்
  5. பொரித்ததை ஆறவிடவும். மீண்டும் ஒரு முறை பொரித்து எடுக்கவும். அப்போழுது தான் முறுமுறு என்று வரும். உப்பு மிளகு தூள் சேர்த்து பறிமாறவும் .ஒரு முறை பொரித்தால் போதும் என்று நினைப்பவர்கள் அப்படியே செய்யலாம்
  6. மசாலா ப்ரை க்கு இதேபோல் வெந்நீரில் போட்டு காயவைத்த காய்களுடன் கொடுக்கப்பட்ட மஞ்சள் பொடி காஷ்மீர் சில்லிபவுடர் ஆம்சூர் பவுடர் உப்பு கரம் மசாலா மிளகு பொடி கான்பிளவர் கடலைமாவு சேர்க்கவும்
  7. நன்றாக கிளறி இரண்டு நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும்
  8. எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும் எண்ணெய்யில் போடும்போது ஒவ்வொன்றாக போடவும். இல்லாவிட்டால் எல்லாம் சேர்ந்து விடும்
  9. கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும் இரண்டு முறை ப்ரை செய்யவேண்டியதில்லை
  10. டொமட்டோசில்லி சாஸுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்