வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் புலாவ்

Photo of Vegetable Pulao by Priya Tharshini at BetterButter
916
3
0.0(0)
0

வெஜிடபிள் புலாவ்

Nov-22-2017
Priya Tharshini
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் புலாவ் செய்முறை பற்றி

அருமையான காய்கறிகள் கொண்டு செய்த புலாவ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நெய் - 4 மேசைக்கரண்டி
  2. சீரகம் - 1 தேக்கரண்டி
  3. சோம்பு - 1 தேக்கரண்டி
  4. பட்டை - 1 துண்டு
  5. ஏலக்காய் - 1
  6. கிராம்பு - 2
  7. பிரின்ஜி இலை - 2
  8. பச்சை மிளகாய் - 2
  9. இஞ்சி - 1 துண்டு
  10. பூண்டு - 3 பல்
  11. புதினா - 2 கைப்பிடி
  12. வெங்காயம் - 1
  13. காய்கறி ( கலந்தது ) - 1/2 கப்
  14. மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி
  15. தனியா தூள் - 1/2 மேசைக்கரண்டி
  16. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  17. பாஸ்மதி அரிசி - 1 கப்
  18. தண்ணீர் - 2 கப்
  19. உப்பு - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. உங்களுக்கு விருப்பமாண காய் கறிகள் 1/2 கப் நறுக்கிக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் சோம்பு , இஞ்சி , பூண்டு , புதினா , ப.மிளகாய் , பட்டை , ஏலக்காய் , கிராம்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. குக்கரில் நெய் சேர்த்து சூடானதும் சீரகம் , பிரின்ஜி இலை சேர்க்கவும்.
  5. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலர் மாறும் வரை வதக்கவும்.
  6. அரைத்த விழுது , மிளகாய் தூள் , மல்லி தூள் ,கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
  7. காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
  8. பின்பு ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
  9. 1 நிமிடம் வதக்கவும். தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலரவும்.
  10. குக்கரை மூடி மிதமான சூட்டில் 2 விசில் விடவும்.
  11. பிரஷர் அடங்கியதும் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்