வீடு / சமையல் குறிப்பு / மீல் மேக்கர் பிரியாணி

Photo of Soya Chunks Briyani by Priya Tharshini at BetterButter
1561
3
0.0(0)
0

மீல் மேக்கர் பிரியாணி

Nov-22-2017
Priya Tharshini
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மீல் மேக்கர் பிரியாணி செய்முறை பற்றி

இது காய்கறிகள் பதில் மீல் மேக்கர் வைத்து செய்யும் பிரியாணி.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி - 1 கப்
  2. தண்ணீர் - 2 கப் + 1 கப்
  3. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  4. நெய் - 2 மேசைக்கரண்டி
  5. கிராம்பு - 2
  6. பிரிண்ஜி இலை - 1
  7. பட்டை - 1 இன்ச் துண்டு
  8. இஞ்சு பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
  9. பச்சை மிளகாய் - 1 நீளமா நறுக்கியது
  10. வெங்காயம் - 1 கப் நீளமா நறுக்கியது
  11. தக்காளி - 1 கப் நீளமா நறுக்கியது
  12. புதினா - கைப்பிடி
  13. கொத்தமல்லி - கைப்பிடி
  14. மீல் மேக்கர் - 1 கப்
  15. உப்பு - 1 மேசைக்கரண்டி
  16. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
  17. பிரியாணி மசாலா - 1 மேசைக்கரண்டி
  18. கரம் மசாலா - 1/4 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. 1 கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கர் சேர்த்து 10 நிமிடம் மூடிவைக்கவும்.
  3. பின்பு தண்ணீரை நன்கு பிழிந்து எடுக்கவும்.
  4. குக்கரில் எண்ணெய் + நெய் சூடாக்கி கிராம்பு , பிரிண்ஜி இலை , பட்டை சேர்த்து தாளிக்கவும்.
  5. வெங்காயம் , ப. மிளகாய் மற்றும் இஞ்சு பூண்டு விழுது சேர்த்து பொன்நிறமாக வதக்கவும்.
  6. பின்பு தக்காளி , மிளகாய் தூள் , பிரியாணி மசாலா , கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
  7. தக்காளி வதங்கியதும் புதினா, கொத்தமல்லி, மீல் மேக்கர் சேர்த்து வதக்கவும்.
  8. பின்பு ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து குக்கரில் சேர்த்து வதக்கவும்.
  9. அத்துடன்  2 கப் தண்ணீர் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் 2 விசில் விடவும்.
  10. பிரஷர் அடங்கியதும் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்