Photo of Carrot Rice by App Play at BetterButter
852
3
0.0(0)
0

காரட் ரைஸ்

Dec-01-2017
App Play
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காரட் ரைஸ் செய்முறை பற்றி

அரிசி உணவுகள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 2 மீடியம் சைஸ் – காரட் (துருவினது)
  2. 1 பெரிய கிண்ணம் – சாதம்
  3. 2 tsp – நெய்
  4. 1 tsp – எண்ணெய்
  5. 1 tsp – கடுகு
  6. 1 tsp – உளுத்தம்பருப்பு
  7. 1 tsp – கடலைப்பருப்பு
  8. ½ tsp – பெருங்காயப்பொடி
  9. 1 – பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் (அல்லது காரத்திற்கேற்ப)
  10. 1 ஆர்க்கு – கறிவேப்பிலை
  11. 1 tbsp – முந்திரி
  12. 1 tbsp – திராக்ஷை
  13. 1 tsp – எலுமிச்சை சாறு
  14. அலங்கரிக்க - கொத்துமல்லி தழை
  15. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. காரட்டை துருவிக்கொள்ளவும்.
  2. சாதத்தை உதிராக வடிக்கவும்.
  3. சாதத்துக்கு வேண்டிய உப்பையும் சேர்த்தே சாதம் வடித்தால் உப்பு சாதத்தில் உரைத்திருக்கும்.
  4. எலுமிச்சை சாற்றையும் சேர்த்து சாதம் வடித்தால் சாதம் வெளுப்பாக இருப்பதோடு உதிராகவும் இருக்கும்.
  5. ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணையைக் கலந்து ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத்தூளை ஒன்றன்பின் ஒன்றாகப் போடவும்.
  6. அடுத்து விதை நீக்கி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்களை சேர்த்து கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
  7. கடைசியில் முந்திரி மற்றும் திராக்ஷைகளை சேர்த்துவிடவும்.
  8. அடுத்ததாக துருவின காரட்டை சேர்த்து வதக்கவும்.
  9. காரட் வதங்கும்போது துருவலுக்கு தேவையான உப்பை மட்டும் சேர்க்கவும். (சாதத்தில் அதற்குத் தேவையான உப்பு இருப்பதால் காரட்டுக்கு வேண்டிய உப்பை மட்டும் சேர்க்கலாம். தவிரவும் அதிக உப்பு காரட்டில் தண்ணீர் விட்டுக்கொள்ளவும் கூடும்). காரட் நிறம் மாறாதபடி வதக்கினால் போதும்.
  10. அடுத்து வடித்து வைத்த சாதத்தை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  11. அடுப்பை அணைத்துவிட்டு நறுக்கிய கொத்தமல்லித் தழைகளால் அலங்கரிக்கவும்.
  12. சுவையான கண்ணைக் கவரக்கூடிய காரட் சாதம் நிமிடத்தில் தயார். இது பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் தரவும் வேலைக்குப் போகும் பெண்களுக்கு எளிதில் செய்யக் கூடியதாகவும் இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்