Photo of Pizza sticks by Juvaireya R at BetterButter
376
6
0.0(1)
0

Pizza sticks

Dec-07-2017
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Pizza sticks செய்முறை பற்றி

அருமையான பார்ட்டி உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • பேக்கிங்
  • அப்பிடைசர்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 250 கிராம் மைதா மாவு
  2. 2 தேக்கரண்டி ஈஸ்ட்
  3. 1 தேக்கரண்டி சர்க்கரை
  4. 1தேக்கரண்டி எண்ணெய்
  5. உப்பு தேவையான அளவு
  6. தக்காளி சாஸ் 2 மேஜைக்கரண்டி
  7. சில்லி சாஸ் 1 மேஜைக்கரண்டி
  8. நறுக்கிய வெங்ஙாயம் 2 மேஜைக்கரண்டி
  9. நறுக்கிய தக்காளி 1தேக்கரண்டி
  10. நறுக்கிய குடைமிளகாய் 2 தேக்கரண்டி
  11. துருவிய சீஸ் 1/4 கப்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மிதமான சூட்டில் தண்ணீர் ஊற்றி அதில் ஈஸ்ட் சேர்க்கவும்.
  2. அதில் சர்க்கரை சேர்க்கவும்.
  3. நன்கு கலக்கி மூடி போட்டு 10 நிமிடம் பொங்கவிடவும்.
  4. நன்கு பொங்கிய ஈஸ்ட்டில் மாவை போடவும்
  5. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசையவும்.
  6. எண்ணெய்வுஊற்றவும்.
  7. நன்கு பிசைந்து அரைமணிநேரம் மாவு 2 மடங்காக மாறும் வரை மூடிவைக்கவும்.
  8. மாவு நன்கு பொங்கி இருக்கிறது.
  9. சிறிய உருண்டைகளாக போடவும்
  10. வட்டவடிவில் தேய்க்கவும்.
  11. பின் அதனை பேக்கிங் பாத்திரத்தில் வைக்கவும். 15 நிமிடம் மூடிவைக்கவும்.
  12. பின் போர்க் கரண்டியால் குத்திவிடவும்.
  13. பின் மைக்ரோவேவ்அவனில் 180 டிகிரியில் 12-15 நிமிடம் வேகவிடவும்.
  14. பீட்சா சாஸ், தயார் செய்ய தக்காளி சாஸ்,சில்லிசாஸ், வெங்காயம்,'தக்காளி,குடை மிளகாய் சேர்க்கவும்.
  15. அக்கலவையை பீட்சா பேஸ்ஸில் தடவவும்.
  16. பின் அதன்மேல் சிஸ்ஸை துருவவும்.
  17. அதனை சிறுதுண்டுகளாக நீளமாக வெட்டவும்.
  18. பேக்கிங் தட்டில் எண்ணெய் தடவி பீட்சா ஸ்டிக்கை வைக்கவும்.
  19. மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி சூட்டில்12- 15 நிமிடம் வேகவிடவும்.
  20. பின் ஆரியதும் பரிமாறவும்.
  21. அருமையான பார்ட்டி உணவு தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-12-2017
Vasuyavana   Dec-12-2017

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்