வீடு / சமையல் குறிப்பு / பார்ட்டி பிரட் பாஸ்கெட்

Photo of Party bread basket by Jayanthy Asokan at BetterButter
578
2
0.0(0)
0

பார்ட்டி பிரட் பாஸ்கெட்

Dec-08-2017
Jayanthy Asokan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பார்ட்டி பிரட் பாஸ்கெட் செய்முறை பற்றி

பிரட் மற்றும் காய்கறிகள், பன்னீர், சீஸ், கெட்சப் கொண்டு செய்யப்பட்ட ஆரோகியமான பார்ட்டி ரெசிபி ஆகும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரட் 6 ஸ்லைஸ்
  2. பீன்ஸ் 6
  3. கேரட் 1
  4. காலிஃளவர் 1/4 கப்
  5. குடமிளகாய் 1
  6. பன்னீர் 1/2 cup
  7. வெங்காயம் 1/2
  8. பூண்டு 3 பல்
  9. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  10. சில்லி பிளேக்ஸ் 3 டீஸ்பூன்
  11. மிக்ஸ்ட் ஹெர்ப் 1/2 டீஸ்பூன்
  12. பானிபூரி மசாலா பொடி 1/2டீஸ்பூன்
  13. எண்ணெய் 4 டீஸ்பூன்
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. சீஸ் துருவியது 1/2கப்
  16. டொமட்டோ கெட்சுப் 4டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. காய்கறி மற்றும் பனீரை பொடியாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
  3. அனைத்து காய்கறிகளும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.
  4. பின் பன்னீர் மற்றும் அனைத்து பொடிகளையும் உப்புடன் சேர்ந்து கலந்து வதக்க வேண்டும்.
  5. பிரட் ஸ்லைஸ் ஓரங்களை வெட்டவேண்டும்.
  6. பிரட் துண்டங்கள் மேல் எண்ணெய் தடவி ரோலர் பின் கொண்டு அழுத்தி விட வேண்டும்.
  7. மஃபின் ட்ரேயில்பிரட் யை வைத்து கலவையை வைக்கவேண்டும்.
  8. அதன் மேல் துருவிய சீஸ் தூவி கெட்சப் போட வேண்டும்.
  9. ஓவனை 200 டிகிரி ப்ரீஹீட் செய்யவேண்டும்.
  10. பிரட் பாஸ்கெட் யை 15 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
  11. பார்ட்டி பிரட் பாஸ்கெட் தயார்.
  12. அனைவருக்கும் பிடித்த பார்ட்டி ஸ்பெஷல் ஸ்னாக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்