Photo of Sugarless Mixed Fruit Kesari by Ayesha Ziana at BetterButter
532
3
0.0(1)
0

Sugarless Mixed Fruit Kesari

Dec-08-2017
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Sugarless Mixed Fruit Kesari செய்முறை பற்றி

சீனி/வெல்லம் எதுவும் சேர்க்காமல் முழுக்க பழங்களை வைத்தே செய்த மிகவும் ருசியான கேசரி. இது என்னுடைய சொந்த ரெசிபிகளில் ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ரவை 1 கப்
  2. கொய்யாப்பழம் 1/2 கப்(தோல் உரித்து பொடியாக நறுக்கியது)
  3. பேரீட்சை 30 அல்லது தேவைக்கு
  4. செவ்வாழைப்பழம் 2
  5. முந்திரி , கிஸ்மிஸ் 15 முதல் 20
  6. தட்டிய ஏலக்காய் 2
  7. நெய் 4 டேபிள் ஸ்பூன்
  8. தண்ணீர் 3 கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் தண்ணீரை கொதிக்க வைத்து, விதை நீக்கிய பேரீட்சை சேர்த்து மூடி, 5 நிமிடங்கள் வேக வைக்கவும். பின் அடுப்பை அணைத்து லேசாக ஆறியதும், பேரீட்சையை நன்றாக பிழிந்து கொள்ளவும். 2 கப் பேரீட்சை தண்ணீர் தனியே எடுத்து வைக்கவும்.
  2. நான்ஸ்டிக் பேனில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி , கிஸ்மிசையும், அதன் பின் ரவையையும் வறுத்து எடுத்து கொள்ளவும்.
  3. அதே பேனில் பேரீட்சை தண்ணீர் சேர்த்து, பின் கொய்யாப்பழம் சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும். அதன் பின்னர் பொடியாக நறுக்கிய செவ்வாழைப்பழத்தையும் சேர்த்து மீண்டும் 4 நிமிடங்கள் வேக விடவும்.
  4. பின்னர் ரவையையும் சிறிது சிறிதாக சேர்த்து கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். மீதமுள்ள நெய்யையும் இடையிடையே ஊற்றி கிளறவும்.
  5. தட்டிய ஏலக்காய் சேர்க்கவும். கலவை ஒட்டாமல் வரும்போது வறுத்த முந்திரி , கிஸ்மிஸ் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  6. நெய் தடவிய தட்டில் கலவையை தட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
  7. செவ்வாழைப்பழம், பேரீட்சையின் இனிப்பே தாராளம் போதுமானது. கொய்யாவின் லேசான புளிப்பும் ருசியைச் சமன் செய்து சீனி சேர்க்காததே தெரியாத அளவு மிகவும் ருசியாக இருக்கும். பார்ட்டிகளில் செய்தும் விருந்தினரை அசத்தலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subadra Baskar
Dec-09-2017
Subadra Baskar   Dec-09-2017

அண்டி என்றால் என்ன?

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்