Photo of Sweetpotato Carrot Ginger Soup by Sowmya Sundar at BetterButter
415
3
0.0(1)
0

Sweetpotato Carrot Ginger Soup

Dec-10-2017
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Sweetpotato Carrot Ginger Soup செய்முறை பற்றி

மிகவும் வித்தியாசமான சுவையான இந்த சூப் ஜீரணத்திற்கு ஏற்றது . எனவே பார்ட்டியின் போது இதை பரிமாறலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சக்கரைவள்ளிக்கிழங்கு - 3 கப்(தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)
  2. நறுக்கிய காரட் - 1 கப்
  3. இஞ்சி -1/4 கப் (தோல் நீக்கி துருவியது)
  4. தண்ணீர்- 5 கப்
  5. உப்பு- தேவையான அளவு
  6. கார்ன் ஃப்ளோர் மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  7. மிளகு தூள்- 1 டீஸ்பூன்
  8. கொத்தமல்லி தழை- சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் இஞ்சி, உப்பு, 1/2 கப் காரட், 2 கப் சக்கரைவள்ளிகிழங்கு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  2. மீதி 1/2 கப் காரட் மற்றும் 1 கப் சக்கரைவள்ளிகிழங்கை மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
  3. அதையும் கொதிக்கும் நீரில் கலந்து சுமார் 20 நிமிடம் கொதிக்க விடவும்.
  4. நன்றாக வெந்ததும் கார்ன் ஃப்ளோர் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து கொதித்து கொண்டிருக்கும் சூப்பில் விட்டு 5 நிமிடம் கழித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
  5. மிளகு தூள் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Jan-24-2018
Subhashni Venkatesh   Jan-24-2018

very different

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்