வீடு / சமையல் குறிப்பு / மொறு மொறு பேக்டு பனானா

Photo of Crispy Baked Banana by Ayesha Ziana at BetterButter
217
2
0.0(0)
0

மொறு மொறு பேக்டு பனானா

Dec-13-2017
Ayesha Ziana
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மொறு மொறு பேக்டு பனானா செய்முறை பற்றி

தேன் மற்றும் சில பொருட்கள் சேர்த்து, பின் பேக் செய்த வாழைப்பழம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. நேந்திரன் பழம் 1
  2. தேன் தேவையான அளவு
  3. பட்டை தூள் 1 முதல் 2 ஸ்பூன் அல்லது தேவைக்கு
  4. எலுமிச்சை 1
  5. அவல் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. நேந்திரன் பழத்தை விதை பக்கம் தெரியும்படி 2 அல்லது 4 துண்டுகளாக நறுக்கவும்(வேறு வாழைப்பழங்கள் வைத்தும் செய்யலாம்).
  2. முதலில் அவற்றின் மீது 2 பக்கமும் படும் படி தேன் தடவவும். பின்னர் 2 பக்கமும் பட்டை தூள் தூவவும். பின்னர் 2 பக்கமும் எலுமிச்சை சாறு தெளிக்கவும்.
  3. மேற்குறிப்பிட்ட 3 பொருட்களிலும் பழம் நன்கு ஊறியதும், அவற்றை அவலில் போட்டு நன்கு பிரட்டி எடுக்கவும்.
  4. பின்னர், வெண்ணெய் தடவிய கேக் டின்னில் பழங்களை அடுக்கி, 10 நிமிடங்கள் ஹை தீயில் முற்சூடு செய்யப்பட்ட பிரஷர் குக்கர் அல்லது ஓவனில் வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  5. சூப்பரான மொறு மொறு பேக்டு பனானா தயார். இது பார்ட்டிகளுக்கு பரிமாற மிக எளிமையான, எல்லோரையும் கவரும் ஸ்னாக்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்