Photo of Lasagna by Asiya Omar at BetterButter
299
5
0.0(0)
0

லசாக்னா

Dec-14-2017
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

லசாக்னா செய்முறை பற்றி

இத்தாலி நாட்டின் பிரபலமான உணவு.பார்ட்டியில் செய்து அசத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • இத்தாலிய
  • பேக்கிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. லசாக்னா செய்ய ரெடிமேட் ஷீட் -6
  2. கொத்துக்கறி -1/4 கிலோ
  3. ஆலிவ் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 150 கிராம்
  5. பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் -4
  6. தக்காளி அரைத்தது - 1 கப்
  7. தக்காளி சாஸ் அல்லது கெட்சப் - அரை கப்
  8. பிட்சா அல்லது பாஸ்தா சாஸ் இருந்தால் சேர்க்கலாம்.
  9. இத்தாலிய சீசனிங் - 1 தேக்கரண்டி
  10. காய்ந்த துளசி இலை -1 தேக்கரண்டி
  11. செடார் சீஸ் - துருவியது - அரை கப்
  12. மொசரல்லா சீஸ் துருவியது - அரை கப்
  13. காரத்திற்கு சில்லி ப்லேக்ஸ் அல்லது மிளகுப் பொடி - 1 தேக்கரண்டி.
  14. ஒயிட் சாஸ் செய்ய:-
  15. வெண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  16. பால் - 250 மில்லி
  17. மைதா -2 மேஜைக்கரண்டி
  18. காளான் நறுக்கியத - ஒரு கப்.
  19. உப்பு,மிளகு தேவைக்கு.

வழிமுறைகள்

  1. கொத்துக்கறி அலசி தண்ணீர் வடிக்கவும். முதலில் கடாயில் எண்ணெய் சூடு செய்து மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. அடுத்து கறி சேர்த்து வேக வைக்கவும்.
  3. வெந்து வரும் பொழுது சில்லி ப்ளேக்ஸ் சேர்க்கவும்.அத்துடன் வேக வைத்து தோல் நீக்கி அரைத்த தக்காளி விழுது சேர்க்கவும்.
  4. நன்கு கலந்து வேக விடவும்.
  5. வெந்ததும் தக்காளி சாஸ் சேர்க்கவும்.நன்கு கொதிக்கட்டும்.
  6. பொடித்த காய்ந்த துளசி இலை சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து வற்றி வரும்.
  7. ஒயிட் சாஸ் செய்ய ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருக்கி அதனோடு காளான் சேர்த்து வதக்கவும்.மைதா சேர்த்து நன்கு பிரட்டி பால் சேர்த்து கட்டி விடாமல் கலக்கி கூழ் போல் ஆனதும் மிளகுத்தூள் சேர்த்து அணைக்கவும்.
  8. இனி ஒவனை 180 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
  9. செடார் சீஸ் துருவி வைக்கவும்.மொசரெல்லா துருவியே கிடைத்தது.
  10. ஒரு சதுர பேக்கிங் பேனில கிரீஸ் செய்து முதலில் லசாக்னா சீட் இரண்டை வைக்கவும்.அதன் மேல் வேக வைத்த கொத்துக்கறியை வைக்கவும்.
  11. அதன் மேல் மீண்டும் ஷீட் வைக்கவும்.
  12. இரண்டு ஷீட் வைக்கவும்.
  13. அதன் மேல் காளான் சேர்த்து செய்த ஒயிட் சாஸ் பரத்தி விடவும்.
  14. அதன் மேல் செடார் சீஸ் தூவவும்.
  15. மீண்டும் அடுத்து மீதியுள்ள வேக வைத்த கொத்துக்கறி பரத்தி வைக்கவும்.
  16. அதன் மேல் லசாக்னா ஷீட் வைக்கவும்.
  17. மீண்டும் அதன் மேல் ஒயிட் சாஸ் மீதியை பரத்தவும்.
  18. அதன் மேல் மொசரல்லா சீஸ் தூவவும்.
  19. மிளகுத்தூள் சேர்க்கவும்.
  20. ஓவனில் 180 டிகிரிக்கு 45 நிமிடம் அல்லது 1 மணி நேரம் பேக் செய்து எடுக்கவும்.
  21. சுவையான லசாக்னா தயார்.துண்டு செய்து வைக்கவும்.ஆறு துண்டாக அல்லது தேவைக்கு போடவும்.
  22. டின்னர் பார்ட்டியில் பரிமாறி அசத்தலாம்.
  23. விருப்பமான உணவுடன் சூப்,சாலட் உடன் சேர்த்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்