வீடு / சமையல் குறிப்பு / வெஜ் நூடுல்ஸ்

Photo of Veg Noodles by Jamuna Nallathambi at BetterButter
60
3
0.0(0)
0

வெஜ் நூடுல்ஸ்

Dec-17-2017
Jamuna Nallathambi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் நூடுல்ஸ் செய்முறை பற்றி

முதலில் நூடுல்ஸை 3 நிமிடங்கள் வேக வைத்து வடிகட்டி கொள்ளவும். பிறகு வடசட்டியில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டை சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் கேரட் முட்டைக்கோஸ் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும். இப்போது மிளகு தூள்1/2தேக்கரண்டி ராக் சால்ட் உப்பு சேர்க்க வேண்டும். நன்கு கலந்து பிறகு வேக வைத்த நூடுல்ஸை சேர்க்கவும். நன்கு கிளறி விடவும். இரண்டு சிட்டிகை சர்க்கரை சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்....

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நூடுல்ஸ் 200 கிராம்
  2. பெரிய வெங்காயம் 2
  3. கேரட் 2
  4. முட்டைக்கோஸ் சிறிய அளவு
  5. குடைமிளகாய் 1
  6. பூண்டு 5 பல்
  7. சோயா சாஸ் 2 தேக்கரண்டி
  8. கிரீன் சில்லி சாஸ்1தேக்கரண்டி
  9. ராக் சால்ட் சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. சர்க்கரை சிறிது
  12. சமையல் எண்ணெய் 3மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. நூடுல்ஸை 3 நிமிடங்கள் வேகவைத்து வடித்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்