பருப்பு பக்வான் | Dal Pakwan in Tamil

எழுதியவர் Vibha Bhutada  |  27th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Dal Pakwan by Vibha Bhutada at BetterButter
பருப்பு பக்வான்Vibha Bhutada
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

856

0

பருப்பு பக்வான் recipe

பருப்பு பக்வான் தேவையான பொருட்கள் ( Ingredients to make Dal Pakwan in Tamil )

  • சாட் மசாலா தேவைக்கேற்ப (விருப்பம்)
  • பச்சை சட்னி - தேவையான அளவு
  • புளிச் சட்னி - தேவையான அளவு
  • 7 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
  • 7 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • பரிமாறுவதற்கு:
  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • சுவைக்கேற்ற உப்பு
  • 1 தேக்கரண்டி நெய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி ஓமம்
  • 1 கப் மைதா
  • பாக்வானுக்கு:
  • எண்ணெய் - தேவையான அளவு
  • சுவைக்கேற்ற உப்பு
  • 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1 தேக்கரண்டி மாங்காய்த் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா பவுடர்
  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தக்காளி, பொடியாக நறுக்கியது
  • 1 இன்ச் இஞ்சிப்பூண்டு துண்டு, துருவப்பட்டது
  • 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  • 1 கப் கடலைப் பருப்பு
  • பருப்புக்கு:

பருப்பு பக்வான் செய்வது எப்படி | How to make Dal Pakwan in Tamil

  1. பருப்புக்கு: கடலைப்பருப்பு தண்ணீரில் கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிரஷர் குக்கரில் 1 மற்றும் 1/2 கப் தண்ணீரோடு 3.4 விசில்களுக்கு வேகவைத்து பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
  2. அடுப்பை நிறுத்திவிட்டு, பிரஷர் இயல்பாகவே வெளியேற விடவும். சிறுதீயில் பருப்பு அடர்த்தியான பதத்தினை அடையும் வரை வேகவைத்து அடுப்பை நிறுத்திவிட்டு பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
  3. ஒரு சிறிய கிண்ணத்தில், மசாலா பவுடர்களைச் சேர்த்து தாராளமான பருப்பின் மீது தூவவும். கொஞ்சம் எண்ணெயைச் சூடுபடுத்தி மெதுவாக மசாலா பவுடர்கள் மீது ஊற்றவும். புதிய கொத்துமல்லியால் அலங்கரித்து, எடுத்து வைக்கவும்.
  4. பாக்வானுக்கு: மாவைச் சலித்துக்கொள்க. மாவுடன் ஓமம், சீரகம், உப்பு, நெய் சேர்க்கவும். நன்றாகக் கலந்து மாவை மென்மையான மாவாக பிசைந்துகொள்க, ஒரு சமயத்தில் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து.
  5. போதுமான எண்ணெயை ஒரு நான் ஸ்டிக் கடாயில் சூடுபடுத்தி மாவை சிறுசிறு பகுதிகளாக அல்லது உருண்டைகளாகப் பிரித்துக்கொள்க. இடத்தில் மாவைத் தூவி ஒவ்வொரு உருண்டையையும் மெலிதான பூரியாக உருட்டிக்கொள்க.
  6. முள்கரண்டியைப் பயன்படுத்தி உருட்டிய பூரியில் வடிவக் குறிகளை ஏற்படுத்துக. இது பூரியை உப்பாமல் தடுக்கும். எண்ணெய் போமுன அளவு சூடானதும், உருட்டிய பூரியை அதில் போட்டு சிறு தீயில் பொன்னிறமாகும்வரை இரண்டு பக்கங்களும் மொறுமொறுப்பாக மாறும்வரை பொரிக்கவும்.
  7. ஒரு உறிஞ்சுத் தாளைக் கொண்டு வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்க. பரிமாறுவதற்கு முன் பருப்பை ப்ரிஹீட் செய்து எடுத்துவைக்கவும். ஒரு பக்வானை பரிமாறும் தட்டில் வைத்து பருப்பு ஒரு பகுதியாக சமமாக அதன் மீது பரப்பவும்.
  8. புளிச்சட்டினி, பச்சை சட்னி, 1 தேக்கரண்டி வெங்காயம், 1 தேக்கரண்டி கொத்துமல்லி, சாட் மசாலா ஆகியவற்றைச் சமமாக அவற்றின் மீது தூவவும். இதையே அதிக பேருக்குத் தயாரிக்கவும் மேற்கொள்ளவும். உடனே பரிமாறவும்.

Reviews for Dal Pakwan in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.