வீடு / சமையல் குறிப்பு / பருப்பு பக்வான்

Photo of Dal Pakwan by Vibha Bhutada at BetterButter
385
136
4.5(0)
0

பருப்பு பக்வான்

Jan-27-2016
Vibha Bhutada
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • பண்டிகை காலம்
 • சிந்தி
 • பிரெஷர் குக்
 • பாய்ளிங்
 • ஃபிரையிங்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. பருப்புக்கு:
 2. 1 கப் கடலைப் பருப்பு
 3. 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
 4. 1 இன்ச் இஞ்சிப்பூண்டு துண்டு, துருவப்பட்டது
 5. 1 தக்காளி, பொடியாக நறுக்கியது
 6. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 7. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 8. 1 தேக்கரண்டி கரம் மசாலா பவுடர்
 9. 1 தேக்கரண்டி மல்லித்தூள்
 10. 1 தேக்கரண்டி மாங்காய்த் தூள்
 11. 1 தேக்கரண்டி சீரகத்தூள்
 12. சுவைக்கேற்ற உப்பு
 13. எண்ணெய் - தேவையான அளவு
 14. பாக்வானுக்கு:
 15. 1 கப் மைதா
 16. 1 தேக்கரண்டி ஓமம்
 17. 1 தேக்கரண்டி சீரகம்
 18. 1 தேக்கரண்டி நெய்
 19. சுவைக்கேற்ற உப்பு
 20. பொரிப்பதற்கு எண்ணெய்
 21. பரிமாறுவதற்கு:
 22. 7 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய வெங்காயம்
 23. 7 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
 24. புளிச் சட்னி - தேவையான அளவு
 25. பச்சை சட்னி - தேவையான அளவு
 26. சாட் மசாலா தேவைக்கேற்ப (விருப்பம்)

வழிமுறைகள்

 1. பருப்புக்கு: கடலைப்பருப்பு தண்ணீரில் கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிரஷர் குக்கரில் 1 மற்றும் 1/2 கப் தண்ணீரோடு 3.4 விசில்களுக்கு வேகவைத்து பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
 2. அடுப்பை நிறுத்திவிட்டு, பிரஷர் இயல்பாகவே வெளியேற விடவும். சிறுதீயில் பருப்பு அடர்த்தியான பதத்தினை அடையும் வரை வேகவைத்து அடுப்பை நிறுத்திவிட்டு பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
 3. ஒரு சிறிய கிண்ணத்தில், மசாலா பவுடர்களைச் சேர்த்து தாராளமான பருப்பின் மீது தூவவும். கொஞ்சம் எண்ணெயைச் சூடுபடுத்தி மெதுவாக மசாலா பவுடர்கள் மீது ஊற்றவும். புதிய கொத்துமல்லியால் அலங்கரித்து, எடுத்து வைக்கவும்.
 4. பாக்வானுக்கு: மாவைச் சலித்துக்கொள்க. மாவுடன் ஓமம், சீரகம், உப்பு, நெய் சேர்க்கவும். நன்றாகக் கலந்து மாவை மென்மையான மாவாக பிசைந்துகொள்க, ஒரு சமயத்தில் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து.
 5. போதுமான எண்ணெயை ஒரு நான் ஸ்டிக் கடாயில் சூடுபடுத்தி மாவை சிறுசிறு பகுதிகளாக அல்லது உருண்டைகளாகப் பிரித்துக்கொள்க. இடத்தில் மாவைத் தூவி ஒவ்வொரு உருண்டையையும் மெலிதான பூரியாக உருட்டிக்கொள்க.
 6. முள்கரண்டியைப் பயன்படுத்தி உருட்டிய பூரியில் வடிவக் குறிகளை ஏற்படுத்துக. இது பூரியை உப்பாமல் தடுக்கும். எண்ணெய் போமுன அளவு சூடானதும், உருட்டிய பூரியை அதில் போட்டு சிறு தீயில் பொன்னிறமாகும்வரை இரண்டு பக்கங்களும் மொறுமொறுப்பாக மாறும்வரை பொரிக்கவும்.
 7. ஒரு உறிஞ்சுத் தாளைக் கொண்டு வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்க. பரிமாறுவதற்கு முன் பருப்பை ப்ரிஹீட் செய்து எடுத்துவைக்கவும். ஒரு பக்வானை பரிமாறும் தட்டில் வைத்து பருப்பு ஒரு பகுதியாக சமமாக அதன் மீது பரப்பவும்.
 8. புளிச்சட்டினி, பச்சை சட்னி, 1 தேக்கரண்டி வெங்காயம், 1 தேக்கரண்டி கொத்துமல்லி, சாட் மசாலா ஆகியவற்றைச் சமமாக அவற்றின் மீது தூவவும். இதையே அதிக பேருக்குத் தயாரிக்கவும் மேற்கொள்ளவும். உடனே பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்