பட்டர் பீன்ஸ் தேங்காய் புலாவ் | Butter Beans Coconut Pulao in Tamil

எழுதியவர் Priya Suresh  |  27th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Butter Beans Coconut Pulao by Priya Suresh at BetterButter
பட்டர் பீன்ஸ் தேங்காய் புலாவ்Priya Suresh
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

881

0

Video for key ingredients

  பட்டர் பீன்ஸ் தேங்காய் புலாவ் recipe

  பட்டர் பீன்ஸ் தேங்காய் புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Butter Beans Coconut Pulao in Tamil )

  • 2 கப் பாஸ்மதி அரிசி (கழுவப்பட்டு அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கப்பட்டது)
  • 2 எண்ணிக்கை வெங்காயம் (மெலிதாக நறுக்கப்பட்டது)
  • 6 எண்ணிக்கை பூண்டு பற்கள்
  • 1 கப் வெண்ணெய் பீன்ஸ் (வேகவைக்கப்பட்டது)
  • 2 எண்ணிக்கை பே இலைகள்
  • 3 எண்ணிக்கை கிராம்பு
  • 2 எண்ணிக்கை ஏலக்காய்
  • 1 எண்ணிக்கை இலவங்கப்பட்டை
  • எண்ணெய்
  • நறுக்கப்பட்ட புதினா இலைகள்
  • அரைப்பதற்கு:
  • 1/2 கப் புதினா இலைகள்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 6 எண்ணிக்கை பச்சை மிளகாய்

  பட்டர் பீன்ஸ் தேங்காய் புலாவ் செய்வது எப்படி | How to make Butter Beans Coconut Pulao in Tamil

  1. புதினா இலைகள், தேங்காய், பச்சை மிளகாயை சாந்தாக அரைத்துக்கொள்க. தேங்காய் பால் பிழிந்து தேங்காய் பால் 4 கப் வரும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து எடுத்து வைத்துக்கொள்க.
  2. போதுமான எண்ணெயை ஒரு பிரஷர் குக்கரில் சூடுபடுத்தி எல்லா மசாலாக்களையும் பொன்னிறமாகும்வரை வறுக்கவும். பூண்டு பற்களை சேர்த்து அவை சற்றே பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும். நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் சேர்த்து அது மென்மையாகும்வரை வதக்கவும்.
  3. இப்போது அரிசி சேர்த்து சிறிது நிமிடங்கள் வதக்கவும். இறுதியாக வேகவைத்த பட்டர்பீன்சை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. இப்போது மசாலா சேர்க்கப்பட்டத் தேங்காய் பாலை அரிசியுடன் சேர்த்து சிம்மில் மூடிபோட்டு அரிசி நன்றாக வேகும்வரை சமைக்கவும். நறுக்கப்பட்ட புதினா இலைகளைச் சேர்ந்து புலாவை மெதுவாகக் கிண்டவும்
  5. ரைத்தாவுடன் பரிமாறவும்.

  Reviews for Butter Beans Coconut Pulao in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.