முட்டை கட்லெட் கிரேவி | Egg cutlet gravy in Tamil

எழுதியவர் Adaikkammai annamalai  |  21st Dec 2017  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Egg cutlet gravy recipe in Tamil,முட்டை கட்லெட் கிரேவி, Adaikkammai annamalai
முட்டை கட்லெட் கிரேவிAdaikkammai annamalai
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

7

1

9 votes
முட்டை கட்லெட் கிரேவி recipe

முட்டை கட்லெட் கிரேவி தேவையான பொருட்கள் ( Ingredients to make Egg cutlet gravy in Tamil )

 • முட்டை - 4
 • தயிர் - 2 ஸ்பூன்
 • பால் - 2 ஸ்பூன்
 • சீனி - 1 ஸ்பூன்
 • உப்பு - (1/4 ஸ்பூன் முட்டிய வேக வைக்க) ( கிரேவிக்கு தேவையான அளவு )
 • எண்ணெய் - (2 ஸ்பூன் முட்டை வேக வைக்க) ( வதக்க 6 ஸ்பூன்)
 • கடுகு - 1/4 ஸ்பூன்
 • சோம்பு - 1/2 ஸ்பூன்
 • கருவேப்பிலை - சிறிது
 • வெங்காயம் - பெரியதாக நறுக்கியது 1
 • தக்காளி - 2
 • மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்
 • அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்;
 • வரமிளகாய்- 7
 • சோம்பு - 1ஸ்பூன்
 • தேங்காய் பூ துருவியது - 2 ஸ்பூன்
 • பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
 • இஞ்சி - சிறு துண்டு
 • வெங்காயம் - 1/2 ..,தக்காளி - 1/2 ,, பூண்டு -6

முட்டை கட்லெட் கிரேவி செய்வது எப்படி | How to make Egg cutlet gravy in Tamil

 1. முதலில் முட்டையை வேக வைப்பதற்கு 4 முட்டையை எடுத்து உடைத்து ஒரு பாத்தி்ரத்தி சேர்க்கவும்.
 2. அதில் தயிர், பால் . உப்பு 1/4 ஸ்பூன்., மஞ்சத்தூள் 1/4 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும் சேர்த்தால் கவுச்சி இருக்காது திகட்டாது அதற்குத்தான் சீனி .
 3. அதன் பின் நன்றாக விஸ்க் செய்யவும்.
 4. அதனுடன் 1 ஸ்பூன் எண்ணெய் விடவும் சேர்த்து நன்றாக விஸ்க் செய்யவும்
 5. விஸ்க் செய்து தயார் செய்ததை குக்கரில் வேக வைக்கவும். 1 சவுண்ட் 5 நிமிடம் சிமில் வேக வைக்கவும்
 6. வேக வைத்ததை எடுத்து துண்டு போட்டு எடுத்து கொள்ளவும்
 7. அதன் பின் இருப்பு சட்டியில் அரைக்க வேண்டியதை வதக்கி எடுக்க வேண்டும்
 8. அதற்கு முதலில் இருப்பு சட்டியில் எண்ணெய் விட்டு சோம்பு, பூண்டு போட்டு வதக்கவும்
 9. அதன் பின் சிறிது, வெங்காயம் , தக்காளி , தேங்காய் பூ, வரமிளகாய் போட்டு நன்றாக வதக்கி வ்டுத்து கொள்ளவும்.
 10. வதக்கி எடுத்தது ஆறியவுடன் அரைத்து எடுத்து கொள்ளவும்
 11. அதன் பின் இருப்பு சட்டியில் எண்ணெய்யை காய வைத்து கடுகு சோம்பு., வெங்காயம் , தக்காளி. உப்பு, மஞ்சத்தூள் போட்டு வதக்கவேண்டும் .
 12. அதன் பின் அரைத்த விழுதை சேர்த்து தண்ணி ஊற்றி கொதிக்க விடவும்
 13. நன்றாக கொதிகக் விட்டு உப்பு பார்த்து தேவை என்றால் போட்டு கொதிக்க விடவும்
 14. பின் அதில் கடைசியாக துண்டு போட்ட முட்டையை கடைசியாக சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாகி இறக்கவும்
 15. சுவையான முட்டை கிரேவி தயார் மேலே சிறிது தயிர் விட்டு சாப்பிடலாம். புலாவ், சப்பாத்தி , இட்லி அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.

எனது டிப்:

முட்டை வேக வைக்கும் பொழுது சட்டியில் என்னை தடவி அடித்த முட்டையை ஊற்றி வேக வைத்தால் ஒட்டாமல் இருக்கும்.

Reviews for Egg cutlet gravy in tamil (1)

Pushpa Taroora year ago

Havent made so far wil try
Reply
Adaikkammai annamalai
a year ago
try sis.. let me know....

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.