வீடு / சமையல் குறிப்பு / வெந்தயம் பூண்டு குழம்பு

Photo of Fenugreek, Garlic Curry by Rabia Hamnah at BetterButter
451
3
0.0(0)
0

வெந்தயம் பூண்டு குழம்பு

Dec-24-2017
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெந்தயம் பூண்டு குழம்பு செய்முறை பற்றி

வாய்வு தொல்லை நீக்கும் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூண்டு-2 (பெரியது)
  2. சின்ன வெங்காயம்-15-20
  3. தக்காளி -2
  4. வெந்தயம்-2 ஸ்பூன்
  5. மிளகாய்-1-2
  6. கடுகு-1 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை - தாளிக்க
  8. நல்லெண்ணெய்- தேவையான அளவு
  9. பெருங்காய பொடி- 1/4 ஸ்பூன்
  10. மசலா பொடி- 1 1/2 டேபிள் ஸ்பூன்
  11. புளி கரைசல்- 1 டேபிள் ஸ்பூன்
  12. அரைக்க வேண்டியவை:
  13. துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
  14. மசலா பொடி- 1/2 டேபிள் ஸ்பூன்
  15. தூள் செய்ய வேண்டியவை:
  16. சீரகம்- 2ஸ்பூன்
  17. பெருஞ்சீரகம்- 1/2 ஸ்பூன்
  18. துவரம் பருப்பு -3 ஸ்பூன்
  19. வெந்தயம்-1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் அரைக்க வேண்டியவற்றை பட்டு போல் அரைத்து கொள்ளவும்.
  2. பின்பு பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து வெத்தயம், கடுகு, கறிவேப்பிலை, காய பொடி தூவி தாளிக்கவும்.
  3. பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, தோல் உரித்த பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். வதங்கியதும் மசலா பொடி சேர்க்கவும்.
  4. பின்பு புளி கரைசல் சேர்க்கவும். பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். குறைந்த தனலில் வேக விடவும்.
  5. பின்பு தூ ள் செய்ய கூறியவற்றை ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் விடாமல் மனம் வரும்வரை வருத்து பின்பு மிக்ஸியில் திரித்து ஆணத்துடன் (குழம்பு) சேர்க்கவும். பின்பு 5நிமிடம் கழித்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்