வீடு / சமையல் குறிப்பு / Ayirai meen kuzhambu/ Ayirai fish curry

Photo of Ayirai meen kuzhambu/ Ayirai fish curry by Asiya Omar at BetterButter
1480
4
0.0(1)
0

Ayirai meen kuzhambu/ Ayirai fish curry

Dec-24-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அயிரை மீன் - கால் கிலோ
  2. நீள் வாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கிலோ
  3. தக்காளி -2
  4. பச்சை மிளகாய் கீறியது -2
  5. நறுக்கிய பூண்டு பற்கள் - 6
  6. மல்லி,கருவேப்பிலை - சிறிது
  7. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  8. கடுகு,வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  10. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  11. வீட்டு குழம்பு/ அல்லது மீன் மசாலா -2 மேஜைக்கரண்டி
  12. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  13. உப்பு - தேவைக்கு.
  14. அரைக்க:-
  15. தேங்காய்த்துருவல் 2-3 மேஜைக்கரண்டி
  16. முந்திரிக்குருணை -1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. அயிரை மீனை முதலில் உப்பு போட்டு மூடி வைக்கவும்.அதன் துடிப்பு அடங்கியவுடன் நன்கு உலசி, அலசி கழுவவும்.தண்ணீர் வடித்து வைக்கவும்.
  2. மீன் மசாலா ஒரு மேஜைக்கரண்டி,உப்பு சேர்க்கவும்.
  3. புளித்தண்ணீரும் சேர்த்து, கலந்து சிறிது இருக்கட்டும்.
  4. நறுக்க வேண்டியவைகளை நறுக்கி தயார் செய்யவும்.
  5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடானவுடன் கடுக்ய்,வெந்தயம்,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  6. அத்துடன் நறுக்கிய வெங்காயம்,பூண்டு,மிளகாய்,தக்காளி சேர்க்கவும்.
  7. மிளகாய்த்தூள் உப்பு போட்டு மூடி வதங்க விடவும்.
  8. வதங்கியதும் ,மீன் மசாலா ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் சேர்க்கவும்.உங்கள் மசாலா காரமாக இருந்தால் அளவு குறைக்கவும்.ஏற்கனவே மீனில் ஊற வைத்துள்ளோம்.
  9. புளி,மசாலாவுடன் உள்ள மீனைச் சேர்க்கவும்.
  10. கொதி வரட்டும்.மீன் வெந்து வரட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
  11. தேங்காய்த்துருவல் முந்திரி குருணை சேர்த்து அரைக்கவும்.
  12. அரைத்து மீன் குழம்பில் விடவும்.தேங்காய் விடாமலும் செய்யலாம்.உங்கள் விருப்பம்.
  13. சிம்மில் வைத்து எண்ணெய் மேலே வரவும் அடுப்பை அணைக்கவும்.
  14. சுவையான அயிரை மீன் குழம்பு தயார். சூடான சோறு,அப்பளம்,பொரியலுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-25-2017
Pushpa Taroor   Dec-25-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்