Photo of Chicken kadai by Asiya Omar at BetterButter
590
4
0.0(1)
0

Chicken kadai

Dec-26-2017
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • உ.பி
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. முதலில் சிக்கன் ஊற வைக்க :-
  2. சிக்கன் - 1 கிலோ
  3. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  4. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  5. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  7. மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
  8. சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
  9. மல்லித்தூள் -1 -2 தேக்கரண்டி
  10. தயிர் -1 மேஜைக்கரண்டி
  11. எலுமிச்சை ஜூஸ் -1 சிறிய பழம்
  12. உப்பு - சுவைக்கு.
  13. கடாயில் பிரட்ட:-
  14. எண்ணெய் - 4 +2 மேஜைக்கரண்டி
  15. நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம்
  16. நறுக்கிய தக்காளி - 100 கிராம்
  17. பச்சை மிளகாய் கீறியது - 3
  18. இஞ்சி பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  19. பெரிய கொடைமிளகாய் - 1
  20. உப்பு - தேவைக்கு.
  21. அலங்கரிக்க பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்.

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கனை மேற்கூறிய பொருட்கள் சேர்த்துஅரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. சிக்கன் ப்ரை செய்ய நான்ஸ்டிக் கடாயில் 4 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு ஊறிய சிக்கன் முழுவதும் போட்டு பொரிக்கவும். தயார் ஆனவுடன் எடுத்து தனியாக வைக்கவும்.
  3. இனி அதே கடாயில் 2 மேஜைக்கரண்டிஎண்ணெய் விட்டு,இஞ்சி நறுக்கியது,பச்சை மிளகாய் கீறியது சேர்க்கவும், வெங்காயம்,தக்காளி,சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.பொரித்த சிக்கன் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.கூட்டு எல்லாம் சிக்கனுடன் சேர்ந்து பிரட்டியது போல் இருக்கும்.
  4. அடுத்து நறுக்கிய கொடைமிளகாய் சேர்த்து பிரட்டவும். 2 நிமிடம் மூடி வைக்கவும்.
  5. திறந்து எல்லாம் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து அலங்கரித்து அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான கடாய் சிக்கன் தயார்.
  7. ப்ரைட் ரைஸ், நாண்,பரோட்டா,ரொட்டியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nur Aishah Vimala
Mar-28-2018
Nur Aishah Vimala   Mar-28-2018

! I tried this recipe today n its very yummy,

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்