வீடு / சமையல் குறிப்பு / Lauki / bottlegourd masala curry recipe

Photo of Lauki / bottlegourd masala curry recipe by neela karthik at BetterButter
280
3
0.0(1)
0

Lauki / bottlegourd masala curry recipe

Dec-30-2017
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • டிபன் ரெசிப்பிஸ்
 • பஞ்சாபி
 • பான் பிரை
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. சுரைக்காய் 1 கப்
 2. உருளைகிழங்கு 1/4 கப்
 3. எள் 1/4 ஸ்பூன்
 4. வேர்க்கடலை 1 ஸ்பூன்
 5. உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
 6. வெந்தயம் சிறிது
 7. சீரகம் 1/4 டீஸ்பூன்
 8. பச்சைமிளகாய் 2
 9. வெங்காயம் 2 பொடியாக அரிந்தது
 10. தக்காளி 2 பொடியாக அரிந்தது
 11. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
 12. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
 13. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
 14. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்
 15. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
 16. எண்ணெய் தாளிக்க
 17. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

 1. சுரைக்காய் உருளைகிழங்கை சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்
 2. வெறும் வாணலியில் வேர்க்கடலை எள் உளுத்தம் பருப்பு வெந்தயம் சீரகம் வறுத்து ஆற வைத்து பொடி செய்யவும்
 3. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
 4. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்தூள் கொத்தமல்லி தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
 5. பச்சைவாசம் இல்லாமல் வதக்கி அரிந்து வைத்த உருளைகிழங்கை சேர்த்து கிளறி 5 நிமிடம் வதக்கவும்
 6. கிழங்கு ஓரளவிற்கு வெந்ததும் அதனுடன் சுரைக்காய் சேர்க்கவும் சுரைக்காயை நன்றாக வதக்க வேண்டும்
 7. கிழங்கு சுரைக்காய் இரண்டும் வதங்கிய பின் தக்காளி மிளகாய் சேர்த்து மசிந்து வருமாறு குறைந்த தணலில் 10 நிமிடம் வேக விடவும்
 8. அரைத்த பொடி, உப்பு சேர்த்து 3 நிமிடம் கிளறவும்
 9. அதில் கரம் மசால் தூவி நன்றாக கலந்து இறக்கி சூடாக பரிமாறவும்
 10. இவற்றை குக்கரில் வைத்து மிதமான தணலில் 2 முதல் 3 விசில் விடலாம்
 11. விரும்பினால் வெறும் தேங்காய் மற்றும் வேர்க்கடலை மட்டும் வறுத்து பொடித்து சேர்க்கலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-01-2018
Pushpa Taroor   Jan-01-2018

Ok

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்