வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு மட்டன் குழம்பு

Photo of Chettinad Mutton Kuzhambu by Surya Rajan at BetterButter
94
4
0.0(0)
0

செட்டிநாடு மட்டன் குழம்பு

Jan-01-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை பற்றி

செட்டிநாட் மட்டன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மட்டன் : ½ கிலோ
  2. நல்லெண்ணெய் : 4 - 5 மேஜைக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் : 15 - 20
  4. தக்காளி : 1
  5. பச்சை மிளகாய் : 2
  6. பட்டை : சிறிதளவு
  7. கிராம்பு : 2
  8. ஏலக்காய் : 2
  9. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  10. பிரியாணி இலை : 1
  11. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  12. மஞ்சள் தூள் : ½  மேஜைக்கரண்டி
  13. உப்பு : தேவையான அளவு
  14. கருவேப்பிலை : சிறிதளவு
  15. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  16. வறுத்து அரைக்க
  17. தேங்காய் துருவல் : 3 மேஜைக்கரண்டி
  18. சீரகம் : 1 மேஜைக்கரண்டி
  19. மிளகு  : ½ மேஜைக்கரண்டி
  20. சிவப்பு மிளகாய் : 5
  21. மல்லி : 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. மட்டன் யை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து தனியே வைக்கவும்
  2. ஒரு கடாயில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு சீரகம் , மிளகு , சிவப்பு மிளகாய் , தேங்காய் துருவல் ஆகியவற்றை 1நிமிடம் மிதமான தீயில் வறுத்து , சூடு தணிந்த பின் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து தனியே வைக்கவும்
  3. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை , கிராம்பு , ஏலக்காய் , பிரியாணி இலை சேர்த்து 10 செகண்ட் கழித்து பின் சின்ன வெங்காயம், கருவேப்பிலை  சேர்த்து வதக்கவும் . பின் தக்காளி, மிளகாய்  சேர்த்து வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின் வறுத்து அரைத்த விழுது , உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் மட்டன் யை  சேர்த்து 1  நிமிடம் கிளறி மிதமான தீயில் வேக வைக்கவும்.
  6. பின் அவற்றை ஒரு குக்கருக்கு மாற்றி மட்டன் முழ்கும் அளவு தண்ணீர் விட்டு 3 - 4 விசில் ( 15 - 20 ) நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்
  7. பின் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்