Photo of Snake guard Poricha Curry by Adaikkammai Annamalai at BetterButter
870
7
0.0(2)
0

Snake guard Poricha Curry

Jan-01-2018
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Snake guard Poricha Curry செய்முறை பற்றி

வெறும் சாம்பாரை விட பொரிச்ச குழம்பு சுவையாக இருக்கும்.... அதுவும் புடலங்காய் பொரிச்ச குழம்பு ரொம்ப சுவையாக இருக்கும். செய்யவும் சுலபமானது...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 2
  2. தக்காளி - 2 சிறிதாக இருந்தால் ...பெரிசுனா 1 போதும்
  3. புடலாங்காய் - 1
  4. பூண்டு -4
  5. பாசி பருப்பு - 1 கை அளவு
  6. உப்பு - தேவையான அளவு
  7. அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்
  8. தேங்காய் பூ - 5 ஸ்பூன்
  9. பச்சைமிளகாய் - 5
  10. சீரகம் - 2 ஸ்பூன்
  11. இவை மூன்றையும் அரைத்து எடுத்து கொள்ளவேண்டும்
  12. தாளித்து கொட்ட எண்ணெய் - 3 ஸ்பூன்
  13. கடுகு -1/4 ஸ்பூன்
  14. உளுந்து -1/2 ஸ்பூன்
  15. உரலில் இடித்து கடைசியாக சேர்க்க
  16. மிளகு - 10
  17. சீரகம் - 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பருப்பை மஞ்சத்தூள் எண்ணெய் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  2. 2 சவுண்ட் 5 நிமுடம் வேக வைத்து நன்றாக வெந்த பின் இறக்கி எடுத்து கொள்ளவும்
  3. பிறகு அரைக்க வேண்டிய பொருளை அரைத்து எடுத்து கொள்ளவும்
  4. அதன் பிறகு சட்டியை காய வைத்து எண்ணெய் ஊற்றி ...கடுகு... உளுந்து.. கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் பொறிந்தவுடன் பூண்டு முதலில் போட்டு வதக்கவும் அப்பொழுதுதான் பச்சை வாடை போகும்
  5. அதன் பின் வெங்காயம்.. தக்காளி.. உப்பு..சேர்த்து வதக்கவும்
  6. நன்றாக வதங்கியவுடன் அதனுடன் நறுக்கிய புடலங்காய் சேர்த்து வதக்கவும்
  7. ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  8. அதை மூடி வைத்தால் சீக்கிரமாக வெந்து விடும்...
  9. அதன் பின் அதில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்... கொதிக்கவிடவும்
  10. கொதித்த பின் அரைத்த தேங்காய்... அதில் சேர்த்து கொதிக்கவிடவும்
  11. நன்றாக ஒரு 10 நிமிடம் கொதித்த பின் கடைசியாக மிளகு மற்றும் சீரகத்தை இடித்து எடுத்து கொள்ளவேண்டும்
  12. அதை கடைசியாக தூவி 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும் தேவையென்றால் சிறிது கொத்தமல்லி தூவலாம்
  13. சுவையான புடலங்காய் பொரிச்ச குழம்பு தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Muthu Lakshmi
May-09-2018
Muthu Lakshmi   May-09-2018

Super dish

Pushpa Taroor
Jan-01-2018
Pushpa Taroor   Jan-01-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்