வீடு / சமையல் குறிப்பு / நெத்திலி மீன் கறி

Photo of Anchovies fish curry by Asiya Omar at BetterButter
333
4
0.0(0)
0

நெத்திலி மீன் கறி

Jan-01-2018
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெத்திலி மீன் கறி செய்முறை பற்றி

நெத்திலியை ப்ரை,குழம்பு,அவியல்னு வைப்போம்.இந்தக்கறி செய்து பாருங்க,செமை.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெத்திலி மீன் -1/4 கிலோ
  2. நறுக்கிய வெங்காயம் -100 கிராம்
  3. நறுக்கிய தக்காளி -100 கிராம்
  4. பச்சை மிளகாய் -2
  5. புளி - பெரிய நெல்லியளவு
  6. தேங்காய்ப்பால் -1/2 கப்
  7. எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  8. கடுகு,வெந்தயம் - தலா 1/4 தேக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது அல்லது பூண்டு தட்டியது -1 தேக்கரண்டி
  10. மிளகாய்த்தூள் -1- 1 . 1/2 தேக்கரண்டி
  11. மல்லித்தூள் - 2- 3 தேக்கரண்டி
  12. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  13. கறிவேப்பிலை - சிறிது
  14. நறுக்கிய மல்லி இலை
  15. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. நெத்திலி மீனை வயிற்றை பிளந்து முள்ளை அப்படியே எடுத்து விடலாம்.தலைலையையும் எடுக்கவும்.பின்பு நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு வெந்தயம்,கருவேப்பிலை தாளிக்கவும்.வெங்காயம் சிவற வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  3. நன்கு சிம்மில் வைத்து வதக்கவும்.
  4. அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி,மிளகாய் சேர்க்கவும் உப்பு சேர்த்து மூடினால் கூட்டு போல் ஆகும்.
  5. மசாலாத்தூள் வகைகள் சேர்க்கவும்.நன்கு வதக்கி புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.உப்பு புளி சரி பார்க்கவும்.
  6. வாடை மடங்கியதும் மீனைச் சேர்க்கவும்.ஐந்து நிமிடம் கொதிக்கட்டும்.கெட்டியாகும்.
  7. நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.
  8. சுவையான நெத்திலி மீன் கறி தயார்.
  9. சாதம்,சப்பாத்தி,இட்லி,தோசை,ஆப்பம் உடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்