வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சிவப்பு அரசி பருப்பு பால்ஸ்

Photo of Potato Red Rice Dal Balls by Krishnasamy Vidya Valli at BetterButter
426
5
0.0(0)
0

உருளைக்கிழங்கு சிவப்பு அரசி பருப்பு பால்ஸ்

Jan-24-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சிவப்பு அரசி பருப்பு பால்ஸ் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு வைத்து ஒரு வித்தியாசமான முயற்சி. உருளைக்கிழங்கை எப்போதும் எண்ணெயில் டீப் ப்ரை செய்கிற ரெசிப்பியிலிருந்து ஒரு மாறுதலுக்காக ஆவியில் வேக வைத்து சத்தான ஆரோக்கியமான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால்ஸ் செய்யலாம். நோ ஆனியன் நோ கார்லிக் ரெஸிபி இது. எண்ணெய் இரண்டு டிராப்ஸ் மட்டும் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு இரண்டு வீதம் மூன்று பேர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு - 1
  2. சிவப்பு அரிசி - 1 / 4 கப்
  3. உருட்டு உளுந்து - 1 மேஜைகரண்டி
  4. துவரம்பருப்பு - 1 மேஜைகரண்டி
  5. மிளகாய் வத்தல் - 1 அல்லது 2
  6. உப்பு-1/2தேக்கரண்டி
  7. பெருங்காயம் - 2 சிட்டிகை
  8. கரம்மசாலா - 2 சிட்டிகை
  9. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  10. தாளிக்க கடுகு - 1 / 4 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  12. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  13. பெருங்காயம் - 2 சிட்டிகை
  14. எண்ணெய் - 2 டிராப்ஸ்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. மிக்ஸியில் சிவப்பு அரிசி உருட்டு உளுந்து துவரம்பருப்பு பெருங்காயம் மிளகாய் வத்தல் சேர்த்து கரகரப்பாக திரிக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்துகொதிக்கவிடவும்
  4. நன்றாக கொதித்தபின் திரித்து வைத்ததை சேர்த்து கெட்டி தட்டாமல் கிளறவும்
  5. வேகவைத்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா மற்றும் கொத்தமல்லி இலை போட்டு சுருள கிளறி இறக்கவும்
  6. சிறு சிறு பால்ஸ் ஆக உருட்டி வைக்கவும்
  7. ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைக்கவும்
  8. வெளியே எடுத்து பறிமாறவும். தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை விருப்பப்பட்டால் மல்லி சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்