வீடு / சமையல் குறிப்பு / ஆலூ மட்டர் மசாலா

Photo of Aloo mattar masala by Yasmin Shabira at BetterButter
405
4
0.0(0)
0

ஆலூ மட்டர் மசாலா

Jan-30-2018
Yasmin Shabira
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆலூ மட்டர் மசாலா செய்முறை பற்றி

பூரி மற்றும் சப்பாத்திக்கு மிகவும் சுவையான சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பெரிய சைஸ் உருளைக்கிழங்கு : 2
  2. பச்சை பட்டாணி : 1 கப்
  3. வெங்காயம் : 1
  4. தக்காளி : 1
  5. பச்சை மிளகாய் : 3
  6. கடலை பருப்பு : 2 தேக்கரண்டி
  7. கடுகு : 1 தேக்கரண்டி
  8. பூண்டு : 5 பல்
  9. கறிவேப்பிலை : 1 கொத்து
  10. மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
  11. ஜீரக தூள் : 1 தேக்கரண்டி
  12. கடலைமாவு : 2 மேசைக்கரண்டி
  13. எண்ணெய் : 2 மேசைக்கரண்டி
  14. உப்பு : தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து ஒன்றிரண்டாக மசித்து கொள்ளவும்
  2. மாவாக மசித்து விடக்கூடாது
  3. பச்சை பட்டாணி மற்றும் கடலைப்பருப்பை கால் மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை சேர்க்கவும்
  5. கடுகு வெடித்ததும் பூண்டு சேர்க்கவும்
  6. பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  7. வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  8. பிறகு மஞ்சள் தூள் ஜீரக தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  9. பின்னர் மசித்து வைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்
  10. பச்சை பட்டாணி மற்றும் கடலை பருப்பும் சேர்த்து நன்றாக கிளறி சிறிது 1 கப் அளவு தண்ணீர்ஊற்றி மூடி சிம்மில் வேக விடவும்
  11. கடலை மாவை 1/2 டம்ளர் அளவு தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும்
  12. கலவை நன்றாக வெந்து ஓரளவு கெட்டிப்பட்டு வரும்போது கரைத்து கடலைமாவை சேர்த்து நன்கு கிளறி மேலும் 3-4 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்
  13. சுவையான ஆலூ மட்டர் மசாலா தயார்!!!
  14. இது பூரி மற்றும் சப்பாத்திக்கு அட்டகாசமான காம்பினேஷன்
  15. தோசையுடன் ஸ்டஃப் செய்து மசால் தோசையாகவும் பறிமாறலாம்....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்