வீடு / சமையல் குறிப்பு / நீர் எலுமிச்சங்காய்

Photo of Neer elumichangai by Krishnasamy Vidya Valli at BetterButter
458
5
0.0(0)
0

நீர் எலுமிச்சங்காய்

Feb-01-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

நீர் எலுமிச்சங்காய் செய்முறை பற்றி

இது எலுமிச்சை அதிகமாக காய்க்கும் காலம். அதைவைத்து எளிதான சுவையான இந்த ஊறுகாய் செய்யலாம். இந்த ஊறுகாய் கடைகளில் கிடைப்பது அரிது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. எலுமிச்சம் பழம்-5
  2. இஞ்சி - ஒரு பெரிய துண்டு
  3. பச்ச மிளகாய் -4
  4. உப்பு - 2 1/2 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. கடுகு - 1 தேக்கரண்டி
  8. வெந்தயப்பொடி - 1 தேக்கரண்டி
  9. பெருங்காயம்-4சிட்டிகை
  10. எண்ணெய்- 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேவையானவற்றை எடுத்துக்கொள்ளவும்
  2. எலுமிச்சையை உப்பு தொட்டு நறுக்கிக்கொள்ளவும் . இஞ்சியை தோல் சீவி நறுக்கி வைக்கவும் பச்சமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் மஞ்சள் பொடி ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைக்கவும்
  4. அதோடு நறுக்கிய எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயப்பொடி பெருங்காயம் (மணப்பொடி) சேர்த்து தாளிக்கவும்
  6. தாளித்ததை சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊறியபின் பறிமாறலாம் . கண்ணாடி அல்லது பீங்கான் கிண்ணத்தில் வைத்து பயன்படுத்தவும். மீதமானால் ப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்