வீடு / சமையல் குறிப்பு / பேரிச்சை மற்றும் ஆப்பிள் இனிப்பு சட்னி

Photo of Dates and Apple Sweet Chutney by Sowmya Sundar at BetterButter
381
4
0.0(0)
0

பேரிச்சை மற்றும் ஆப்பிள் இனிப்பு சட்னி

Feb-02-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேரிச்சை மற்றும் ஆப்பிள் இனிப்பு சட்னி செய்முறை பற்றி

சட்னி காரமாகதான் செய்ய வேண்டுமா என்ன.. ஆப்பிள் மற்றும் டேட்ஸ் வெல்லம் சேர்த்து செய்யும் இந்த இனிப்பான சட்னி மிகவும் சத்தானது மற்றும் சுவையானது. பழங்கள் உண்ணாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆப்பிள் -1
  2. பேரிச்சை -8 அல்லது 10
  3. வெல்லம் -2 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு - ஒரு சிட்டிகை
  5. மிளகாய் தூள்-1/4 டீஸ்பூன்
  6. பட்டை -1துண்டு
  7. நெய்-1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆப்பிளை தோல் சீவி நறுக்கி கொள்ளவும்.
  2. மிக்ஸியில் ஆப்பிள் மற்றும் பேரிச்சை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
  3. பட்டையை பொடித்து கொள்ளவும்
  4. கடாயில் வெல்லம் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த ஆப்பிள் பேரிச்சை கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. உப்பு ,பட்டை தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வரை வதக்கவும்.
  6. நன்றாக கெட்டியாக ஆனதும் நெய் சேர்த்து இறக்கவும்.
  7. சுவையான இனிப்பு சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்