உணவக பாணியிலான பேப்பர் தோசை | Restaurant Style Paper Dosa in Tamil

எழுதியவர் Anupa Joseph  |  22nd Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Restaurant Style Paper Dosa by Anupa Joseph at BetterButter
உணவக பாணியிலான பேப்பர் தோசைAnupa Joseph
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  8

  மக்கள்

4877

0

Video for key ingredients

  About Restaurant Style Paper Dosa Recipe in Tamil

  உணவக பாணியிலான பேப்பர் தோசை recipe

  உணவக பாணியிலான பேப்பர் தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Restaurant Style Paper Dosa in Tamil )

  • சுவைக்கேற்ற உப்பு
  • தண்ணீர்
  • எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  • 2 தேக்கரண்டி கடலை பருப்பு
  • 1 கப் உளுத்தம்பருப்பு
  • 1 கப் அரைவேக்காடு/பென்னி அரிசி
  • 2 கப் வெள்ளை அரிசி

  உணவக பாணியிலான பேப்பர் தோசை செய்வது எப்படி | How to make Restaurant Style Paper Dosa in Tamil

  1. பொருள்களைத் தனித்தனியாகக் கழுவிக்கொள்க. இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும். அதிகப்படியானத் தண்ணீரை வடிக்கட்டவும். உளுத்தம்பருப்பு, வெந்தயம், கடலை பருப்பை அரைத்துக்கொள்ளவும், மாவாக்குவதற்குத் தேவையான அளவுத் தண்ணீர் சேர்த்து. ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  2. வெள்ளை அரிசியையும் பொன்னி அரிசியையும் தேவையான அளவு மாவாகத் தயாரிப்பதற்குச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொள்க. சுவைக்கேற்ற அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. அதனால் மாவு நன்றாக கலக்கப்படும்.
  3. சூடான இடத்தில் சேமித்து நொதிக்கவிடவும். நொதித்ததும், மாவை மெதுவாகக் கலக்கவும்.
  4. வானலியைச் சூடுபடுத்தி சில துளிகள் எண்ணெய் விட்டு பேப்பர் டவலால் நன்றாகத் துடைத்து ஒரு கரண்டி மாவை தோலைக்கல்லின் மையத்தில் ஊற்றி வட்டமாக பரவச் செய்யவும்.
  5. தோசை தயாரிக்கப்பட்டதும் பொன்னிறமானதும் அதன் மீது சில துளிகள் எண்ணெய் தெளித்து பரிமாறும் தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
  6. சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

  எனது டிப்:

  கடலை மாவு முறுமுறுப்புத்தன்மையை தோசைக்குக் கொடுக்கும் அதனால் அதை தவிர்க்கவேண்டாம். பொன்னி அரிசியை நீங்கள் தவிர்க்கலாம், அது கிடைக்காதபோது. குளிர்காலங்களில் நொதித்தல் நடப்பதற்கு ஓவனில் லைட் ஆன் செய்து வைக்கலாம்/ ஓவனைச் சற்றே ப்ரீ ஹீட் செய்து ஆஃப் செய்து அதன்பின்னர் மாவுள்ள பாத்திரத்தை அதில் வைக்கலாம்.

  Reviews for Restaurant Style Paper Dosa in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.