Photo of Maangai inji instant pickle by Adhi Venkat at BetterButter
566
4
0.0(1)
0

Maangai inji instant pickle

Feb-07-2018
Adhi Venkat
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Maangai inji instant pickle செய்முறை பற்றி

இது உடனடியாக தயார் செய்யும் ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாங்காய் இஞ்சி - கால் கிலோ
  2. பச்சை மிளகாய் - 2 (அ) 3
  3. உப்பு - தேவைக்கேற்ப
  4. கடுகு - 1/2 தேக்கரண்டி
  5. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  6. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
  7. நல்லெண்ணெய் - சிறிதளவு
  8. எலுமிச்சம்பழம் - 2 (அ) 3

வழிமுறைகள்

  1. மாங்காய் இஞ்சியை கழுவி தோல் சீவி எடுக்கவும்.
  2. சிறியத் துண்டுகளாகவோ அல்லது கேரட் துருவுவது போலவோ செய்து கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும்.
  4. கடுகு வெடித்ததும், உளுத்தம்பருப்பு சேர்க்கவும் .
  5. பெருங்காயத்தூளும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயும் சேர்க்கவும்.
  6. தாளித்தவற்றை மாங்காய் இஞ்சியில் சேர்க்கவும்.
  7. உப்பும், புளிப்புக்கு தகுந்தாற் போல் எல்லுமிச்சை சாறும் சேர்க்கவும்.
  8. எல்லாவற்றையும் நன்கு கலந்து விட்டால் சுவையான ஊறுகாய் தயார்.
  9. உடனடியாக செய்து சுவைக்கலாம்.
  10. குளிர்சாதன பெட்டியில் பத்து நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-07-2018
Pushpa Taroor   Feb-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்