வீடு / சமையல் குறிப்பு / கோங்கூரா சட்னி

Photo of Gongura chutney by Asiya Omar at BetterButter
1143
3
0.0(0)
0

கோங்கூரா சட்னி

Feb-08-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோங்கூரா சட்னி செய்முறை பற்றி

ஆந்திரா ஸ்பெஷல், புளிச்சக்கீரையில் செய்யக்கூடியது,சத்தும் சுவையும் அலாதி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வதக்க:-
  2. எண்ணெய் -2 தேக்கரண்டி
  3. நறுக்கிய புளிச்சக்கீரை - 2 கப்
  4. பூண்டு -4 பல்
  5. சின்ன வெங்காயம் -10
  6. உப்பு - தேவைக்கு.
  7. வறுத்து அரைக்க:-
  8. எண்ணெய் -1 தேக்கரண்டி
  9. உளுந்து -1 தேக்கரண்டி
  10. முழு மல்லி -1 தேக்கரண்டி
  11. எள்ளு -1 தேக்கரண்டி
  12. சீரகம் -1/2 தேக்கரண்டி
  13. மிளகாய் வற்றல் -3-4
  14. ( காரம் அவரவர் விருப்பம்)
  15. தாளிக்க:-
  16. நல்ல எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  17. கடுகு - 1/2 தேக்கரண்டி
  18. பெருங்காயம் பொடி -கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கீரையை ஆய்ந்து அலசி நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வறுக்க சொன்ன உளுந்து,மல்லி,எள்ளு,சீரகம்,மிளகாய் வற்றல் சிவற வறுத்து ஆற வைக்கவும்.
  3. அதே கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு,சின்ன வெங்காயம் போட்டு வதக்கி,கீரை,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. ஆற விடவும். வறுத்த பொருட்களை மிக்சி ஜாரில் பொடிக்கவும்.அத்துடன் கீரை சேர்த்து மூன்று சுற்று சுற்றி எடுக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,பெருங்காயம் தாளிக்கவும்.
  6. அரைத்த கீரை விழுது சேர்த்து வதக்கவும்.
  7. சுவையான கோங்கூரா சட்னி தயார். சாதத்தில் போட்டு சாப்பிட்டால் ஆஹா என்ன ருசி தான்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்