வீடு / சமையல் குறிப்பு / மோர் மிளகாய் சட்னி

Photo of Mor Milagai Chutney by Vins Raj at BetterButter
82
4
0.0(0)
0

மோர் மிளகாய் சட்னி

Feb-13-2018
Vins Raj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மோர் மிளகாய் சட்னி செய்முறை பற்றி

சுவையான மோர் மிளகாய் சட்னியை இட்லி, தோசை,சப்பாத்தியுடன் பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தமிழ்நாடு
 • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. 4 மோர் மிளகாய்
 2. 1 மே.க. கடலை பருப்பு
 3. 1 தே.க. உளுந்தம் பருப்பு
 4. 1/2 தே க கடுகு
 5. ஒரு கைப்பிடி புதினா தழை
 6. 1/2 கப் துருவிய தேங்காய்
 7. ஒரு சிறிய நெல்லி அளவு புளி
 8. 1 மே க எண்ணெய்
 9. தாளிக்க
 10. 1 தே க எண்ணெய்
 11. 1/2 தே க கடுகு
 12. 1/2 தே க உளுந்தம் பருப்பு
 13. 1/4 தே க பெருங்காயத்தூள்
 14. 1 கொத்து கருவேப்பிலை

வழிமுறைகள்

 1. ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி மோர் மிளகைவை வறுக்கவும், வறுபட்டவுடன் வாணலியிலிருந்து எடுத்து தனியே எடுத்து வைக்கவும்.
 2. அதே வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு பொன்னிறமாக வறுக்கவும்.
 3. வறுபட்டவுடன் கடுகை பொரிய விடவும், பின்னர் புளி சேர்க்கவும்.
 4. பின்னர் புதினா தழையை சேர்த்து அது சற்று வதங்கியவுடன், தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.
 5. சூடு ஆறின பின்பு மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்தும், மிளகாய் நீங்கலாக தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்
 6. கடைசியில் மோர் மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். உப்பு சேர்க்க தேவையே இல்லை, மோர் மிளகாயின் உப்பே தேவையானதாக இருக்கும்
 7. தாளிக்க, வாணலியில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு சேர்த்து பொரிந்தவுடன், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சட்னியில் சேர்க்கவும்.
 8. சுவையான மோர் மிளகாய் சட்னியை இட்லி, தோசை,சப்பாத்தியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்