வீடு / சமையல் குறிப்பு / அவசர அரைச்ச சாம்பார்/குழம்பு பொடி

Photo of Avsara aracha sambar/kuzhambu podi by Krishnasamy Vidya Valli at BetterButter
644
2
0.0(0)
0

அவசர அரைச்ச சாம்பார்/குழம்பு பொடி

Feb-13-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

அவசர அரைச்ச சாம்பார்/குழம்பு பொடி செய்முறை பற்றி

திடீரென ஐந்தாறு பேர்கள் மதிய உணவுக்கு வரும்போது நாம் ஏற்கனவே திரித்து வைத்த சாம்பார் பொடி மட்டும் போட்டு வைத்தால் சாம்பார்/குழம்பு கணிசமாக இருக்காது. இந்த பொடி சேர்த்தால் திக்காக வரும். வாரத்திற்கு/பத்து நாட்களுக்கு ஒரு முறை இந்த பொடி திரித்து வைத்துக்கொண்டு சாம்பார்/குழம்பு செய்யும்போது சேர்த்தால் அரைத்த சாம்பார்/குழம்பு போன்று சுவையுடன் இருக்கும் . ரெகுலர் சாம்பார் பொடி சீக்கிரத்தில் தீராது அதிக நாட்கள் வரும். எட்டு பேர்கள் ஒரு நேரம் சாம்பார்/குழம்பு சாப்பிடுவதற்கு தேவையான அளவு கொடுக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக பயன்மடுத்தலாம் அல்லது இதை ப்ரிஜ்ஜில் வைத்து இந்த பொடி பாதி சாம்பார்பொடி பாதி சேர்த்தும் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கடலைப் பருப்பு -2மேஜைக்கரண்டி
  2. கொத்தமல்லி விதை -2 மேஜைக்கரண்டி
  3. கட்டி பெருங்காயம் -1 துண்டு
  4. வெந்தயம் -1 தேக்கரண்டி
  5. மிளகாய் வத்தல்- 10
  6. தேங்காய் துருவல் -2 தேக்கரண்டி
  7. எண்ணெய் -1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் தேங்காய் துருவல் தவிர எல்லாவற்றையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
  2. தேங்காய் துருவலை தனியாக வறுக்கவும்
  3. எல்லாம் சேர்த்து ஆறவைத்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  4. ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு ப்ரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்