கொல்க்கத்தா பாணி எக் ரோல் | Kolkata Street Style Egg Roll in Tamil

எழுதியவர் Moumita Malla  |  28th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kolkata Street Style Egg Roll by Moumita Malla at BetterButter
கொல்க்கத்தா பாணி எக் ரோல்Moumita Malla
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

3146

0

கொல்க்கத்தா பாணி எக் ரோல் recipe

கொல்க்கத்தா பாணி எக் ரோல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kolkata Street Style Egg Roll in Tamil )

  • மைதா - 3/4 கப்
  • முட்டைகள் - 2
  • வெள்ளரிக்காய் - 1/2 (நறுக்கியது)
  • வெங்காயம் - 1 நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
  • தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் சாஸ் - 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  • சுவைக்கேற்ற உப்பு
  • ரீபைண்டு ஆயில் - 1 தேக்கரண்டி

கொல்க்கத்தா பாணி எக் ரோல் செய்வது எப்படி | How to make Kolkata Street Style Egg Roll in Tamil

  1. மைதாவோடு கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு பார்த்திரத்தில் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மாவில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மிருதுவான மாவாக கொஞ்சம் தண்ணீர் விட்டுத் தயாரித்துக்கொள்ளவும்.
  2. மாவை ஈரத்துணியால் மூடி 15 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
  3. இப்போது மாவை 1 நிமிடம் பிசைந்து 2 சம அளவுள்ள உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு உருண்டையை எடுத்து 6 இன்ச் விட்ட அளவில் வட்டமாக உருட்டிக்கொள்க.
  5. ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை எடுத்து கோஞ்சம் உப்பு தூவி அடித்துக்கொள்ளவும்.
  6. கடாயை ஒரு முறை சூடுபடுத்திக்கொள்க. கடாய் சூடானதும் உருட்டிய பரோட்டாவை கடாயில் வைத்து திருப்பிப்போட்டு வேகவைக்கவும். மேலே கொஞ்சம் எண்ணெய் விட்டு உடனே திருப்பிப்போட்டு அடுத்த பக்கத்தையும் வேகவைக்கவும். கொஞ்சம் எண்ணெய் உற்றி சமைக்கவும்.
  7. அடித்து வைத்துள்ள முட்டையை பரோட்டாவில் ஊற்றி கரண்டியால் மெதுவாக பரப்பவும். முட்டையை 2-3 நிமிடங்கள் வேகவைத்து மேலும் 1-2 நிமிடங்கள் திருப்பிப்போட்டு முட்டை வேகும்வரை வேகவைக்கவும்.
  8. ஒரு முட்டை பரோட்டாவை ஒரு பட்டர் பேப்பர் மீது வைத்து, நறுக்கிய வெள்ளரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சாஸ், பச்சை மிளகாய் சாஸ் ஆகியவற்றை பரப்பவும். பரோட்டாவின் ஒரு பக்கத்தில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, உப்பு தெளித்துக்கொள்ளவும்.
  9. பட்டர் பேப்பரோடு சுருட்டி அடிப்பாகத்தை நேர்த்தியாக மடித்துக்கொள்ளவும்.

எனது டிப்:

உலராமலும் நீள்தன்மையிலான மாவைப் பெறுவதற்கும் ஈரத் துணியால் மாவை மூடி வைப்பது அவசியம்.

Reviews for Kolkata Street Style Egg Roll in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.